AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: உருவாகும் புயல் – இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்

Tamil Nadu weather today : வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அக்டோபர் 26, 2026 காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Alert: உருவாகும் புயல் – இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Oct 2026 06:39 AM IST

சென்னை, அக்டோபர் 25: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Low Pressure Area)வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 2026 அக்டோபர் 26 காலை புயலாக வலுப்பெற்று, 2026 அக்டோபர் 28 அன்று ஆந்திரக் கடற்கரையில் அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 25, 2026 அன்று 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அக்டோபர் 26, 2026 காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 27 காலை அதே பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் 28, 2026 ஆந்திர மாநிலம் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி வடக்கே நகர்வதால், தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் தாக்கத்தால் அக்டோபர் 26, 2026 நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இதன் காரணமாக அக்டோபர் 25, 2026 இன்று தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் அக்டோபர் 25, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் வருகிறது நவீன சூப்பர் சைக்கிள்.. ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

சுற்றுலா தலங்கள் மூடல்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2026 அக்டோபர் 25, 26 ஆகிய 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டதால், கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளாத மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் மலைப்பாதை பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதே போல நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். மேலும் ஊட்டி மலை ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

Follow Us