ஈரோடு செல்லும் முதல்வர் விஜய்? ரோட் ஷோ செல்ல திட்டம்!
CM Vijay Erode Visit : ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில், 2026 நவம்பர் 3 அன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்களவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, அக்டோபர் 24: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் விஜய் வரும் 2026 நவம்பர் 3, 2026 செவ்வாய்க்கிழமை ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, ஈரோடு நகரில் முதல்வர் ரோடு ஷோ (Road Show) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனியார் கல்லூரியில் அரசு விழா
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில், 2026 நவம்பர் 3 அன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கொடைக்கானலில் கனமழை காரணமாக 5 இடங்களில் மண்சரிவு; தீவாக மாறிய கிராமம்




ஈரோட்டில் ரோடு ஷோ?
இதற்காக, முதல்வர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, ஈரோடு நகரில் முதல்வர் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் விரிவான நிகழ்ச்சி நிரல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2026 அக்டோபர் 16 ஆம் தேதி கோவை சென்ற முதல்வர் விஜய், அங்கு பெரியார் அறிவுலகக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். அதே நாளில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.408.25 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.மேலும் ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவையைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தின் மற்றொரு முக்கிய மாவட்டமான ஈரோட்டுக்கு முதல்வர் செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அப்பகுதி மக்களிடையேயும் கட்சியினரிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தவெகவை வலுப்படுத்துவதற்காக அவர் அடிக்கடி பயணிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இனி மின் கட்டணத்தை நாமே கணக்கிட்டு பணம் செலுத்த முடியும்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
முதல்வர் விஜய்க்காக தயாராகிறது பாமணி இல்லம்
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பாமணி இல்லத்தை, முதல்வர் விஜயின் முகாம் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் குடியேறிய பிறகு, “பாமணி இல்லம்” என்ற பெயரை “வெற்றி வீடு” என்று மாற்ற தமிழக அரசின் பொதுப்பணித்துறை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாட்களில் முதல்வர் விஜய் இந்த இல்லத்தை நேரில் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை