AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமணமான பெண்ணை சீரழித்த காக்கி.. நான் சொன்னால் எஸ்பியே கேட்பார்.. கன்னியாகுமரி ஏட்டு மிரட்டல்!

Harassment Complaint Against Constable : கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான பெண்ணை ஏமாற்றி திருமணத்தை மீறிய உறவில் இருந்து குழந்த பிறக்க காரணமாக இருந்த தனிப்பிரிவு காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதன் மீது மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமணமான பெண்ணை சீரழித்த காக்கி.. நான் சொன்னால் எஸ்பியே கேட்பார்.. கன்னியாகுமரி ஏட்டு மிரட்டல்!
காவலர் சாம்சன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 18:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பிலாவிலையை சேர்ந்தவர் ஜோசப் மெசியா தாஸ். இவரது மனைவி ஷாலினி ( 37 வயது). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜோசப் மெசியா தற்போது வெளிநாட்டில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தம்பதி இடையே கடந்த 2023- ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் ஷாலினி புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கு தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்த சாம்சன் ( 45 வயது) என்பவர் ஷாலினியின் செல்போன் எண்ணை பெற்றுள்ளார். அத்துடன், அன்றைய இரவே ஷாலினிக்கு வாட்ஸ் ஆப் கால் செய்து ஏட்டு சாம்சங் பேசியுள்ளார். அப்போது, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஏட்டு

இதை நம்பிய ஷாலினி ஏட்டு சாம்சனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எப்போது பேசினாலும் ஷாலினிக்கு ஆதரவாக இருப்பது போலவே சாம்சன் பழகி உள்ளார். இந்த பழக்கம் நான் நடுவில் நட்பாக மாறிய நிலையில் தனக்கு திருமணம் நடைபெற்றது ஷாலினியிடம் மறைத்துள்ளார். இதை நம்பிய ஷாலினியும், அவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி பல முறை தனிமையில் இருந்துள்ளனர். இதனால், ஷாலினியின் வீட்டிலேயே ஏட்டு சாம்சன் தங்கி இருந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் பரபர சம்பவம்.. வீடு புகுந்து அரிவாள் தாக்குதல்.. கணவன்- மனைவி கொடூர கொலை.. கைதான நபர் பகீர் வாக்குமூலம்!

திருமணத்தை மீறிய உறவில் குழந்தை பிறப்பு

இந்த நிலையில், ஷாலினி கர்ப்பமான நிலையில், கணவரை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்படி ஷாலினியை வற்புறுத்தியுள்ளார். அதன்படி, வெளிநாட்டில் இருந்து வந்த ஜோசப் ஒரு மாதம் ஊரில் தங்கியிருந்து விட்டு மீண்டும் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர், ஷாலினியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு உதவிய நிலையில் குழந்தையும் பிறந்தது. அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷாலினி கேட்ட நிலையில், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக சாம்சன் தெரிவித்துள்ளார்.

ஏட்டு மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்

அத்துடன், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மிரட்டியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாலினியை, நான் எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவில் பணிபுரிவதால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் சொன்னால் எஸ்.பி.யை கேட்பார். உன்னையும், குழந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஷாலினி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஏட்டு சாம்சன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஏட்டு சாம்சன் தலைமறைவாக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: ரூ.5 கோடி லஞ்ச புகார்.. ஆய்வாளர் கைது சட்டத்துக்கு புறம்பானது.. உடனே விடுவிக்க வேண்டும்.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Follow Us