Sleep Talking: தூக்கத்தில் முணுமுணுக்கும் பழக்கமா..? இது ஆரோக்கியமானதா..?
Sleep Disorders: தூக்கத்தில் பேசுவது அல்லது முணுமுணுப்பது (சோம்னிலோக்வி) பலருக்கும் பொதுவானது. கனவுகள், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்கள். இது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், தொடர்ச்சியாக ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். நல்ல தூக்கப் பழக்கங்கள், மன அமைதி, படுக்கை நேரத்தை சீரமைத்தல் போன்றவை தூக்கத்தில் பேசுவதைத் தடுக்கவும், ஆரோக்கியமான உறக்கத்தைப் பெறவும் உதவும்.
தூக்கத்தில் (Sleeping) பேசுவது அல்லது முணுமுணுப்பது பலரிடம் காணப்படும் ஒரு விஷயமாகும். பொதுவாக இது கனவுகள், மன அழுத்தம் (Stress) மற்றும் தூக்கம் தொடர்பான செயல்முறைகளால் ஏற்படலாம். மன அமைதிக்கும் நல்ல தூக்கத்திற்கும், ஒரு வழக்கமான படுக்கை நேரத்தைக் கடைப்பிடிப்பதும், தூங்குவதற்கு முன் மூளையைத் தளர்த்துவதும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு நன்மை பயக்கும். தூங்கும்போது சில தூக்கத்தில் நடப்பதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது சில சமயங்களில் சிலருக்கு பெரிய பிரச்சனையாக தோன்றலாம். அதேநேரத்தில், தூக்கத்தில் சில கை மற்றும் கால்களை தங்களை அறியாமல் அசைக்கிறார்கள், இது ஆபத்தானது அல்ல. தொடர்ந்து, தூக்கத்தில் பேசுவதையும், முணுமுணுப்பதையும் வழக்கமாக செய்கிறார்கள். இதனால், அருகில் இருப்பவர்களுக்கு பயமும், நிம்மதி இல்லாமல் போய்விடும். இந்தநிலையில், தூக்கத்தில் பேசுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தண்ணீர் குடித்தாலும் அடிக்கடி தாகமா..? இது இருந்தால் புறக்கணிக்காதீர்கள்!
தூக்கத்தின் போதும் நமது மூளை சுறுசுறுப்பாகவே இருக்கும். இதனால்தான் பலர் கனவு காணும்போது தூக்கத்தில் பேசவோ முணுமுணுக்கவோ தொடங்குகிறார்கள். பொதுவாக இந்தப் பிரச்சனை தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், இதில் கவனம் செலுத்துவது அவசியம்.
தூக்கத்தில் பேசுவதை என்னவென்று அழைப்பார்கள்?
தூக்கத்தில் பேசுவது அல்லது முணுமுணுப்பது சோம்னிலோக்வி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பாராசோமியாவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் பேசுவது மட்டுமின்றி, வேறு சிலர் தூக்கத்தில் தங்கள் கைகளையும் கால்களையும் அசைக்கத் தொடங்குகிறார்கள். தூக்கத்தில் பேசுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இது பெரும்பாலும் கனவுகள், அன்றைய நிகழ்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவையும் பொதுவான காரணங்களாகக் கருதப்படுகின்றன. சிலர் கெட்ட கனவுகள் அல்லது பயத்தின் காரணமாகவும் தூக்கத்தில் பேசத் தொடங்குகிறார்கள்.
எப்போது கவனமாக இருக்க வேண்டும்?
உங்களுக்கு எப்போதாவது தூக்கம் தடைபட்டால், அது பொதுவாகக் கவலைக்குரிய விஷயம் அல்ல. இருப்பினும், இந்தப் பிரச்சனை தினமும் ஏற்பட்டாலோ, மீண்டும் மீண்டும் கெட்ட கனவுகளை ஏற்படுத்தினாலோ, அல்லது தூக்கத்தைக் கெடுத்தாலோ, நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
ALSO READ: நள்ளிரவுக்குப் பிறகும் தூங்காமல் இருக்கிறீர்களா? புற்றுநோய் வருமா?
நல்ல உறக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்..?
- தினமும் சரியான நேரத்திற்கு உறங்கச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
- போதுமான அளவு உறங்குங்கள் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கவும்.
- உறங்குவதற்கு முன் டீ, காபி மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
- படுக்கையறைச் சூழலை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருங்கள்.
- உறங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது அல்லது மென்மையான இசையைக் கேட்பது மனதை ஆசுவாசப்படுத்த உதவும்.



