AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி மின் கட்டணத்தை நாமே கணக்கிட்டு பணம் செலுத்த முடியும்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

New App For Calculating Electricity Bills : தமிழகத்தில் வீட்டு மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு கட்டணத்தை செலுத்துவதற்காக புதிய செல்போன் செயலியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .

இனி மின் கட்டணத்தை நாமே கணக்கிட்டு பணம் செலுத்த முடியும்.. மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 19:05 PM IST

தமிழகத்தில் பொதுமக்களே தங்களது வீடுகளில் மின் கட்டணத்தை கணக்கிட புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பொதுமக்களே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதியை தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மின்சார வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாக சுய கணக்கீடு என்ற புதிய வசதி சேர்க்கப்பட உள்ளது. நுகர்வோர்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள அளவீட்டை செல்போன் செயலி மூலமாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மென்பொருள் தானாகவே இரு மாதங்களுக்கான மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டண பட்டியலை உருவாக்கும்.

செல்போன் செயலி மூலமாக மின் கட்டணம் கணக்கீடு

இந்த கட்டண விவரம் நுகர்வோரின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ் ஆப் செயல்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதில், முதல் கட்டமாக இரு வாரங்களில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழக முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மின் கணக்கீடு தாமதமாவது மற்றும் தவறான கட்டணம் விதிக்கப்படுவது போன்ற புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் எஸ்கேப்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. புழல் போலீசார் விசாரணை!

செயலி மூலமாக மின் கட்டணத்தை கணக்கீடு செய்வது எப்படி

மேலும், ஒரே நுகர்வோர் பல மின் இணைப்புகளுக்கான அளவீடுகளையும் இந்த செல்போன் செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய முடியும். இதற்கு

  • மின்வாரிய செயலியை திறந்து சுய கணக்கீடு என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் மின் இணைப்பு எண்ணை உள்ளீடு செய்து மீட்டரில் உள்ள அளவீடு தெரியுமாறு செல்போன் கேமரா மூலமாக புகைப்படம் எடுக்க வேண்டும்.
  • அதனை சமர்ப்பித்த உடன் முந்தைய அளவீட்டுடன் ஒப்பிட்டு புதிய கட்டண பட்டியல் உருவாக்கப்பட்டு செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • இந்த கட்டணத்தை நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்சார வாரிய அலுவலகத்துக்கோ நேரில் சென்றோ செலுத்தலாம்.

மின் கட்டணம் அதிகமாக வந்தால் . . .

வழக்கத்தை விட அதிகமான கட்டண தொகை வேறுபாடு இருந்தால் அது தொடர்பாக கணக்கிட்டாளர்கள் நேரடியாக வந்து மீண்டும் ஆய்வு செய்வார்கள் என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பூட்டிய வீட்டில் மூவர் சடலம்.. ரத்த வெள்ளத்தில் மனைவி- மகன்.. தூக்கில் கணவன்.. மயிலாடுதுறையில் பரபரப்பு!

Follow Us