AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சியில் காணாமல் போன சிறுமி விற்பனை? புதிய கோணத்தில் வழக்கு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

Gingee Girl Missing Case : விழுப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் அந்த சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், அந்த சிறுமியின் நிலை குறித்தும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

செஞ்சியில் காணாமல் போன சிறுமி விற்பனை? புதிய கோணத்தில் வழக்கு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 16:14 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், பவானி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், 7 வயதான 2- ஆவது மகள் கடந்த 12- ஆம் தேதி அதிகாலை மர்மமான முறையில் மாயமானார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிசிஐடி போலீசாருக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி எஸ். பி. ஜவகர், டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 3- ஆவது நாளாக நடைபெற்று வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில், மாயமான சிறுமி உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா என்ற புதிய கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா

அதன் அடிப்படையில், காணாமல் போன சிறுமி விரைவில் மீட்கப்படுவார் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒரு வேளை சிறுமி வேறு மாநிலத்தை சேர்ந்த உங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் இறங்குவார்கள் என்று தெரிகிறது. முன்னதாக, 10 நாட்கள் சத்தியமங்கலம் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதன் காரணமாக இந்த வழக்கு சி. பி. சி. டி. போலீசார் வசம் மாற்றப்பட்டது.

மேலும் படிக்க: கோவையில் மாணவன் தற்கொலை விவகாரம்.. பள்ளி தலைமை ஆசியர் உள்பட இருவர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!

ஆலம்பூண்டியில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார்

அதன் அடிப்படையில், விசாரணை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனுடன், புதிதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கினர். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்கள் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக காணாமல் போன சிறுமியின் தாய், தந்தை மற்றும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் பொது மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

புதிய கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

அவர்களிடம் பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி இருந்தனர். அதில், அவர்கள் அளித்த பதிவுகளை போலீசார் பதிவு செய்திருந்த நிலையில், சிறுமி மாயமான வீட்டின் பகுதியை வரைபடமாக வரைந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சரியான துப்பு துலங்காத நிலையில், புதிய கோணமாக சிறுமி விற்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க: ரூ.5 கோடி லஞ்ச புகார்.. ஆய்வாளர் கைது சட்டத்துக்கு புறம்பானது.. உடனே விடுவிக்க வேண்டும்.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Follow Us