AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

Vijay Sethupathi Starts Dubbing For Pocket Novel | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் பாக்கெட் நாவல். இந்தப் படத்தின் டப்பிங் பணியை விஜய் சேதுபதி தொடங்கி உள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
பாக்கெட் நாவல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 16:19 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் நாயகனாக நடிக்க தொடங்குவதற்கு முன்பு சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகன்களின் நண்பராக நடித்து வந்த விஜய் சேதுபதி பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தார். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி நாயகனாக நடித்தால் மட்டும் இல்லாமல் தொடர்ந்து அவர் எந்த வேடத்தில் நடித்தாலும் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டில் மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்தடுத்து படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் காந்தி டாக்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தர். இந்தப் படம் வெளியான பிறகு கடந்த செப்டம்பர் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி:

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பாக்கெட் நாவல். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ் பி ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் தியாகராஜ குமாரராஜா எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி டப்பிங் பணியை தொடங்கியது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் நீல அணியின் வெற்றியை திருடும் சிவப்பு அணி… வைரலாகும் வீடியோ!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… டெக்ஸ்லா படத்தில் பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்

Follow Us