AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மம்முட்டியின் படயாத்ரா படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Mammoottys Padayaatra Movie Release Update | மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகர் மம்முட்டியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் படயாத்ரா. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மம்முட்டியின் படயாத்ரா படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
படயாத்ராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 15:34 PM IST

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் வருகின்ற நவம்பர் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மலையால சினிமாவில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது.

அந்த வகையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் மலையாள சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் படயாத்ரா. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

மம்முட்டியின் படயாத்ரா படத்தின் ரிலீஸ் எப்போது:

அதன்படி நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படயாத்ரா படத்தை இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இதில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் ஜெகதீஷ், இந்திரன், கிரேஸ் ஆண்டனி மற்றும் ஸ்ரீஷ்மா சந்திரா உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 4-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் நடைபெறும் சர்வைவல் பேட்டல் டாஸ்க்… வைரலாகும் வீடியோ!

படயாத்ரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் நாட்டின் சூர்யாவின் சீன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

Follow Us