பிக்பாஸில் இந்த வாரம் நடைபெறும் சர்வைவல் பேட்டல் டாஸ்க்… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 6 வாரங்கள் முடிவடைந்து 7-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் என்ன என்பது குறித்து தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது 19 போட்டியாளர்கள் மற்றும் 5 வைல்கார்ட் போட்டியாளர்கள் என மொத்தம் 24 பேர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ளாக் பாண்டி மற்றும் ராகவ் இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து மக்களால் மிகக் குறைவான வாக்குகளைக்ப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மொத்தம் 6 பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதில் குமரன் மட்டும் பணப்பெட்டி உடன் இந்த பிக்பாஸில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 16 பேர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வாரங்கள் முடிவடைந்து தற்போது 7-வது வாரத்தை எட்டியுள்ளது. முந்தைய டாஸ்குகள் விட இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் மிகவும் கடுமையாக இருக்கும் என்பது பார்க்கும் போதே தெரிகின்றது.




பிக்பாஸில் இந்த வாரம் நடைபெறும் சர்வைவல் பேட்டல் டாஸ்க்:
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ள முதல் புரோமோ வீடியோவில் இந்த வாரம் சர்வைவல் பேட்டல் டாஸ்க் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும் ஒரு அணியினர் சிகப்பு நிற உடையிலும் மற்றொரு அணியினர் நீல நிற உடையிலும் இருக்கிறார்கள். இந்த இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்பது பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ரத்த பூமியாக இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day43 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 19, 2026
Also Read… சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா? வைரலாகும் தகவல்