AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா? வைரலாகும் தகவல்

Nayanthara in Dharman Movie Update | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீண்டும் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா? வைரலாகும் தகவல்
நயன்தாரா - ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2026 11:38 AM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும் அதிக அளவில் தமிழ் மொழியில் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் தனது பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அடுத்தடுத்து கேமியோ மற்றும் இறுதியாக அண்ணாத்த ஆகியப் படங்களில் இணைந்து நடித்து இருந்தார். இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அன்புடன் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா?

தர்மன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோருக்குப் பிறகு, இந்தப் படத்தில் இணையும் அடுத்த பெண் முன்னணி நட்சத்திரம் இவராவார். கதையில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும், படத்தில் பல காட்சிகளில் இவர் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 எனும் பிரம்மாண்ட வெற்றிப் படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை, குறிப்பாக நகைச்சுவை காட்சிகளைச் சிறப்பாக அமைத்துள்ளதாகத் தெரிகிறது.

Also Read… ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி… ஒரு ஆண்டை நிறைவு செய்தது துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் டிடிஎஃப் வாசனின் கேம் ப்ளே… கோட்டைவிட்ட போட்டியாளர்கள் – வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ

Follow Us