பிக்பாஸில் திருடுபோன வைரம்… சந்தேகத்தின் வலையில் சிக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 6-வது வாரம் ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்குகள் வழங்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் வைரம் திருடு போன நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெறுகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 38 நாட்கள் முடிவடைந்து 39-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் இந்தப் போட்டியில் உள்ள போட்டியாளர்கள் டாஸ்க் விளையாடுவதையும் அவர்களின் தனித்துவமான ஆட்டத்தையும் பார்வையாளர்கள் பாராட்ட தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 6-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் எஞ்சியுள்ள நிலையில் அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் மாரத்தான் என இரண்டு டாஸ்குகளிலும் சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என்று போட்டியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டைமண்ட் டாஸ்கில் டைமண்ட் திருடுபோனது நேற்று.
நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வைரத்தை டிடிஎஃப் வாசன் திட்டமிட்டபடி யாருக்கும் தெரியாமல் திருடி பதுக்கி வைத்துவிட்டார். அவர்தான் திருடினாரா அல்லது எங்கு ஒழித்து வைத்துள்ளார் என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.




பிக்பாஸில் திருடுபோன வைரம்… சந்தேகத்தின் வலையில் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் வைரத்தை திருடியது யார் என்பதை கண்டறிய ஒரு மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அவினாஷ், ஜேசன் மற்றும் வினோத் பாபு ஆகியோர் உள்ளனர். இவர்களின் விசாரணை வலையில் தன்யா, கரிஷ்மா மற்றும் டிடிஎஃப் வாசன் என மூன்று நபர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் அவினாஷ் – ஜேசன் இடையே முற்றிய வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day39 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 15, 2026
Also Read… இணையத்தில் வைரலாகும் சீன் படத்திலிருந்து வெளியான ஆத்தி இவ யார்ரா பாடலின் லிரிக்கள் வீடியோ