மண்டாட்டி பட வில்லனின் புதுப் படம்… வாழ்த்து சொன்ன சூரி – வைரலாகும் பதிவு
Soori Wishes Actor Suhas | தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சுகாஸ் தமிழ் சினிமாவில் மண்டாட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவர் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுஹாஸ். இவர் தெலுங்கு மொழியில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் நாயகனின் நண்பனாகவும், காமெடியனாகவும் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் சுஹாஸ் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மண்டாட்டி என்ற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் நேரடியாக நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து சுஹாஸின் நடிப்பைப் பார்த்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சுஹாசிற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது தற்போது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சுஹாஸ் தமிழ் சினிமாவில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகர் சுஹாஸ் தமிழ் சினிமாவில் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படம் ஹைட் அண்ட் சில்க். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேந்திர பாலா எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சுஹாஸிற்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி நடிக்க உள்ளார். இந்த நிலையில் நேற்று படத்தின் டைட்டில் டீசர் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




மண்டாட்டி பட வில்லனின் புதுப் படம்… வாழ்த்து சொன்ன சூரி:
அதன்படி நடிகர் சுஹாஸ் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக சுஹாஸ் அறிமுகம் ஆகும் நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அன்புள்ள சகோதரர் சுஹாஸ், நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிப்பதைக் காண்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஹைட் அண்ட் சில்க் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்காக நீங்கள் என்னென்ன படைப்புகளைத் தயாராக வைத்துள்ளீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகும் கார்த்திகேயனுக்கும் எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்தக் குழுவிற்கும் என் அன்பும் வெற்றியும் கிடைக்கட்டும்.
Also Read… ஆர்யாவின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Always happy to see you explore something new dear #Suhas brother ❤️
Wishing you all the very best for #HideAndSilk. Can’t wait to see what you have in store for us!
Best wishes to @kaarthekeyens for his telugu debut 🔥
Lots of love and success to dear @isanjkayy, director @RajendraBala and the entire @StoneBenchers @misrilallpics team 🤗
https://t.co/uv78tWiCmo
— Actor Soori (@sooriofficial) October 12, 2026
Also Read… பிக்பாஸில் ஓபன் நாமினேஷனால் அவினாஷ் – சாந்தினி இடையே ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் வீடியோ