AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்

Superstar Rajinikanth talks about Anirudh | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜெயிலர் 2 விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்த ஜெயிலர் 2 படத்தில் அனிருத்தின் வேலை எப்படி இருந்தது என்பது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2026 13:32 PM IST

தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை தொடர்ந்து அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து பலப் படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இந்த நிலையில் அவரது இசையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2.

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் விழா ஒன்றில் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது:

இந்தப் படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது. அவர் ஏற்கனவே மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்தவும், பாரடைஸ் என்ற படத்தில் பணியாற்றவும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் அந்த இசை நிகழ்ச்சிகளை முடித்து, பாரடைஸ் படப் பணிகளையும் நிறைவு செய்த பிறகே எங்கள் படத்திற்கான வேலையைத் தொடங்கினார்.

நெல்சன் மிகுந்த பதற்றத்தில் இருந்தார், ஆனால் அனிருத்தின் தந்தைக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அனிக்கு நெருக்கடி இருக்கும்போதுதான் சிறந்த படைப்புகள் வெளிவரும், என்று அவர் கூறினார். அவரது பாடல்களை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து போன்றது. பின்னணி இசை குறித்து நான் அவரிடம், என்ன அனி, இதைச் சிறப்பாகச் செய்து முடித்துவிடுவீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், கவலைப்படாதீர்கள்… இது மிகச் சிறப்பாக அமையும், என்று பதிலளித்தார்.

Also Read… Vettuvam: வேட்டுவம் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை.. அட இவரா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று தொடங்கியது தனுஷ் 56 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்!

Follow Us