ஒர்ஸ்ட் ஃபர்பாமர் ஆப் தி வீக்.. டிடிஃஎப் வாசன் மற்றும் ஷமா இடையே பலத்த மோதல் – தீயாய் பரவும் புரோமோ!
TTF Vasan And Shama Clash: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தற்போது தமிழில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இந்த வாரத்திற்கான மோசமான போட்டியாளர்களின் நாமினேஷன் நடைபெற்றிருந்தது. இந்த டாஸ்கின்போது ஷமா மற்றும் டிடிஃஎப் வாசன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருந்துவருகிறது. தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிவரும் நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பமான நிலையில், தொடங்கி இன்றுடன் (09/10/2026) கிட்டத்தட்ட 33வது நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்று வார இறுதியான நிலையில், இந்த வாரத்தின் ஒர்ஸ்ட் பர்ஃபாமர் யார் என போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதில் ஷமா டிடிஃஎப் வாசனை (TTF Vasan) நாமினேட் செய்திருந்த நிலையில், அதற்கு டிடிஃஎப் வாசன் கடுமையாக பேசியது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதில் ஷமா மற்றும் வாசன் இருவருமே மோதியது குறித்து இந்த புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: காதல் ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
ஒர்ஸ்ட் ஃபர்பாமர் ஆப் தி வீக் டாஸ்கில் மோதிக்கொள்ளும் ஷமா – டிடிஃஎப் வாசன்:
இந்த வாரத்திற்கான ஒர்ஸ்ட் ஃபர்பாமர் யார் என நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அந்த விதத்தில் போட்டியாளர்கள் நேருக்கு நேராக இந்த வாரத்தின் ஒர்ஸ்ட் ஃபர்பாமர் யார் என நாமினேட் செய்யவேண்டும். அந்த விதத்தில், முதலில் ஷமா, டிடிஎப் வாசனை இந்த வாரத்தின் ஒர்ஸ்ட் ஃபர்பாமர் என நாமினேட் செய்திருந்தார். மேலும் வாசன் குறித்து அவர் சில கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: இனிமேல் அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
இந்நிலையில், இதற்காக கோபப்பட்ட வாசன், எழுந்து ஷமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ஷமா மற்றும் டிடிஎப் வாசன் இடையே இது பலத்த வாக்குவாதமாக அமைந்திருந்தது. இது தொடர்பா புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 33வது நாளின் 1வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day33 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 9, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 33 நாட்களை கடந்துள்ள நிலையில், 5வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின்மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்திருந்த நிலையில், மேலும் பரபரப்பாக இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.