இனிமேல் அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
Actor Sivakarthikeyan | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அதில் அவர் தனது பின்வரும் படங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் சாதனைப் படத்தது. மேலும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன் தான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தையும் இயக்கி வருகிறார்.
மேலும் சேயோன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் தனது 27-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வரவிறுக்கும் படங்கள் குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.




இனிமேல் அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன்:
இனிமேல், முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட மாஸ் கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளேன். அடுத்ததாக, ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். தற்காலிகமாக இப்படம் SK 27 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு வலுவான மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக அமையவுள்ளது, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சேயோன் படத்தின் படப்பிடிப்பு 60% நிறைவடைந்துள்ளது. இன்னும் சில சண்டைக் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளன. பாடல்கள் மற்றும் பிற காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ராம் குமார் இயக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. படத்தின் ஆரம்பக் கட்ட சண்டைக் காட்சியைப் படமாக்கிவிட்டோம், தற்போது அறிமுகப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படங்களில் எத்தகைய விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி நான் இன்னும் வெளிப்படுத்தவில்லை. நான் இங்கு வருவதற்கு முன், இயக்குநர்கள் சிவகுமார் முருகேசன் மற்றும் ராம் குமார் ஆகிய இருவரும் இதுகுறித்த விவரங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்… அனல் பறக்கும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sivakarthikeyan about #Seyon and #SK27
– Hereafter, I’m going to do only mass commercial films full entertainment. Next, I’m doing a film with #RamKumar, which is currently titled #SK27. It’s going to be a solid mass commercial entertainer and is getting ready.
– #Seyon is 60% complete. A few more action scenes are pending. We have already shot the songs and other scenes. The first schedule of the RamKumar film has started. We have shot the opening fight scene, and now we are shooting the opening song.
– I haven’t revealed what you can expect from both films yet. Before I came here, directors Sivakumar Murugesan and RamKumar both asked me to tell you all about it.
— Movie Tamil (@_MovieTamil) October 7, 2026