AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்… அனல் பறக்கும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 4 வாரங்களாக நண்பர்களாக இருந்த அவினாஷ் மற்றும் ஜேசன் இருவரும் இந்த வாரம் டாஸ்க் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து மோதிக்கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று அந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்… அனல் பறக்கும் வீடியோ
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2026 11:15 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி தொடங்கியது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Seson 10). இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. முன்பு 9 சீசன்களில் இல்லாத பல விசயங்களை இந்த 10வது சீசனில் புகுத்தி உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு. அதன்படி இந்த பிக்பாஸில் உள்ள டெமோகிரசி அறை, 24 மணி நேரம் லைவிற்காக நைட் டாஸ்க் மற்றும் லீடர் எக்ஸிட் முறை என வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் முன்பு எந்த சீசன்களில் இல்லாத ஒன்றாக போட்டியாளர்கள் கடுமையாக போட்டிப்போட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலர் மிக்சர் சாப்பிடுவது போல தோன்றினாலும் நிகழ்ச்சியின் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 5-வது வாரம் தொடங்கிய போதே நெருப்பாக தொடங்கியது என்றே சொல்லலாம். அதன்படி இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான டாஸ்கில் முனைப்புடன் பங்கேற்று வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்களாக இந்த டாஸ்க் நடைப்பெற்று வரும் நிலையில் இறுதியில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்:

இந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக நண்பர்களாக வலம் வந்த ஜேசன் மற்றும் அவினாஷ் இடையே இந்த 5-வது வாரத்தில் நடைப்பெறும் டாஸ்கின் காரணமாக சண்டைகள் தொடங்கியுள்ளது. அந்த சண்டை எந்த அளவிற்கு தீவிரம் அடைந்துள்ளது என்றால் ஒருவரை ஒருவர் ஃபிசிக்கல் டார்கெட் செய்துகொள்ளும் அளவிற்கு மிகவும் அக்ரசிவாக அந்த விளையாட்டு சென்றுகொண்டு இருக்கின்றது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் டாஸ்கின் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜேசன் – அவினாஷ்… வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பெரும் மனநிறைவை கொடுத்த படம்… டோரதி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்!

Follow Us