AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் டாஸ்கில் கெட்ட வார்த்தை பேசிய தன்யா… சொல்லி அடித்த அஸ்மிதா – வெளியானது மாஸ் புரோமோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 5-வது வாரம் நடைபெறும் டாஸ்க் போட்டியாளர்களிடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்றைய டாஸ்கில் தன்யா கெட்ட வார்த்தை பேசியது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் டாஸ்கில் கெட்ட வார்த்தை பேசிய தன்யா… சொல்லி அடித்த அஸ்மிதா – வெளியானது மாஸ் புரோமோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 15:49 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 30 நாட்களை முடிவடைந்து தற்போது 31-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து தமிழக மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவொரு ஒவ்வொரு விசயத்தில் வித்யாசமானவரர்களாக உள்ளனர். இந்த நிலையில் இந்த 5-வது வாரத்தில் நிகழ்ச்சி குழு வைத்துள்ள டாஸ்க் பார்வையாளர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் இந்த வாரம் நடைபெறும் லஃப் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து போட்டியிடுகின்றனர். அதில் லைஃப் பாட்டிலில் நிகழ்ச்சி குழு கொடுத்த ரசாயனத்தை ஊற்று மொத்த பாடிகளையும் நிறப்பினால் அந்த அணி போட்டியில் இருந்து நீக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் டாஸ்கில் கெட்ட வார்த்தை பேசிய தன்யா:

இந்த நிலையில் இந்த டாஸ்கின் இரண்டாவது நாளில் போட்டியின் போது தன்யா எதிரணியில் உள்ள அஸ்மிதா மற்றும் ப்ரித்வியைப் பார்த்து கெட்ட வார்த்தையில் பேசுகிறார். அதனால் கோபமடைந்த அஸ்மிதா உன்னை இந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றுகிறேன் என்று சொல்லி அவரை டாஸ்கில் இருந்து வெளியேற்றுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் கடந்த வாரம் ரோப் டாஸ்கில் இருந்து பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதாவின் விளையாட்டு தீவிரம் அடைந்துள்ளதை பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜயை தொடர்ந்து தனுஷ்.. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு.. என்ன பெயர் தெரியுமா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தள்ளிப்போகும் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் பட ரிலீஸ்? வைரலாகும் தகவல்!

Follow Us