Drones: ஜஸ்ட் ஃபார் லவ்.. மிஸ்ட்ரி பேண்ட்ஸி கதையில் உருவான ட்ரோன்ஸ் பட ட்ரெய்லர் வெளியீடு!
Drones Tamil Film Trailer: தமிழ் சினிமாவால் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் சித்தி இத்னானி. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ட்ரோன்ஸ். இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் இன்று (06/10/2026) வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பேமஸான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் சித்தி இத்னானி (Siddhi Idnani). இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ரெட்ட தல (Retta Thala). இதில் அருண் விஜய் (Arun Vijay) ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் தமிழில் இவரின் நடிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ட்ரோன்ஸ் (Drones). இந்த படத்தை இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் (R Raghav Mirdath) இயக்கியுள்ள நிலையில், பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பேண்டஸி மற்றும் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இன்று (06/10/2026) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநரும், தயாரிப்பளாருமான லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: பிரபல இயக்குநரின் படத்திற்கு நோ சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி – வைரலாகும் தகவல்
ட்ரோன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி:
The trailer looks good with the fun part working well & looking forward to see the film in the big screen. Best wishes to @sathishoffl & the entire team for a great success..
#Drones Releasing In Theaters October 16th!
@GMMorganFilms @RMirdath @SiddhiIdnani @ianjalinair @DevadarshiniC @Dravid_Selvam @Mohamedkuraish1 @SassiSelvaraj #RJDeepak @imhari_sr_ @saregamasouth @5starsenthilk @Decoffl_ @cinemawalaoffl
https://t.co/GmexjCco07
— Lingusamy (@dirlingusamy) October 6, 2026
ட்ரோன்ஸ் படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த ட்ரெய்லரானது 3 பேர் கொண்ட நண்பர்கள் குழுவை மையமாக கொண்டு காட்டப்பட்டுள்ளது. ட்ரோன்ஸ் மூலமாக இந்த நண்பர்கள் செய்யும் அட்டகாசம் குறித்த கதையில் உள்ளது. மேலும் இப்படமானது மிஸ்ட்டரி திரில்லர் கதைக்களத்தில் உள்ளது. இதில் தேவதர்ஷினி சூனியக்காரியாக நடித்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுடன் ஹீரோவாக அறிமுகமாகும் அனிருத்? அட இயக்குநர் இவரா?
மேலும் நடிகை சித்தி இத்னானி முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிற. மேலும் இதில் அஞ்சலி நாயர் மற்றும் திராவித் செல்வம் போன்ற நடிகர்களும் லீட் நடிகர்களாக நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படமானது பேண்டஸி கலந்த நகைச்சுவை மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
ட்ரோன்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்:
இந்த படமானது 2026ம் ஆண்டில் அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கிறதாம். தற்போது இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.