பிரபல இயக்குநரின் படத்திற்கு நோ சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி – வைரலாகும் தகவல்
Actress Aishwarya Lekshmi | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் பிரபல இயக்குநரின் படத்திற்கு நோ சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. கடந்த 2017-ம் ஆண்டு மலையாள சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2019-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஆஷா. மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குநர் மற்றும் உச்ச நடிகர் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிரபல இயக்குநரின் படத்திற்கு நோ சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி:
அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் ராக்கா திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் இது தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவல்களை மறுத்த ஐஸ்வர்யா, இல்லை, நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. யாராவது தயவுசெய்து என்னை இந்தப் படத்தில் நடிக்க வையுங்கள், என்று நகைச்சுவையாகக் கூறினார். முன்னதாக, இப்படத்தில் அவர் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் (வில்லி வேடத்தில்) நடிக்கவிருப்பதாக வதந்திகள் பரவியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ‘பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம்’ – ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Aishwarya Lekshmi Denies Being Part Of #AlluArjun – #Atlee’s #Raaka 👀
Actress #AishwaryaLekshmi has clarified that she is not part of #Raaka, putting an end to recent reports linking her to the highly anticipated #AlluArjun × #Atlee project🎬.
Aishwarya dismissed the reports and jokingly said:
“No, I am not part of the film. Somebody please cast me in the film 😄”.
The actress was recently rumoured to be joining the film in a negative role.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) October 4, 2026