AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம்’ – ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்

Janhvi Kapoor About AI Video | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஜான்வி கபூர் தனக்கு எதிரான ஏஐ வீடியோ குறித்து ஒரு கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

‘பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம்’ – ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்
ஜான்வி கபூர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2026 13:23 PM IST

சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ள போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஆவார். இந்தி சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி தொடர்ந்து நடித்து வந்த நடிகை ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடிப்பதை அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகள் மீது பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தண்டனைகள் பெற்று தந்தாலும் இந்த வன்முறையின் அளவு மட்டும் கூடிக்கொண்டேதான் செல்கிறது. அப்படி அந்த வன்முறையில் சமீபத்தில் சிக்கினார் நடிகை ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் நடித்த தேவார படத்தின் பாடல் காட்சிகளை சிலர் ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவிய நிலையில் ஜான்வி கபூருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா, குஷ்பூ உட்பட பலர் தங்களது பதிவுகளை வெளியிட்டதுடன் பெண்களுக்கு எதிராக இப்படி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏஐ வீடியோ குறித்து ஜான்வி கபூர் கடும் கண்டனம்:

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தற்போது அந்த ஏஐ வீடியோவிற்கு எதிராக தனது கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பெண்களை வெறும் போகப் பொருளாகச் சித்தரிக்கவும், அவர்களின் அனுமதியின்றி புனையப்பட்ட உள்ளடக்கத்தைப் பரப்பவும் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, ஒரு பெண்ணின் கண்ணியத்தை மிகக் கடுமையாகச் சிதைக்கும் செயலாகும். இது பாலியல் வன்முறைக்கு இணையான குற்றமாகும்.

மேலும், ஒரு பெண் தொடர்ந்து ஐந்து நாட்கள் ‘சரி’ என்று சொல்லிவிட்டு, ஆறாவது நாள் ‘வேண்டாம்’ என்று சொன்னால், அந்த ‘வேண்டாம்’ என்பதை மதிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது சிலருக்கு இன்னும் கடினமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

தொடர்ந்து அந்தப் பதிவில் பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் நிஜமான, உடல்ரீதியான அச்சத்திற்கே நாம் இன்னும் போதுமான தீர்வுகாணாத நிலையில், அந்த அச்சுறுத்தல் இப்போது டிஜிட்டல் உலகிற்கும் பரவியுள்ளது. உங்கள் மகளைப் பாதுகாப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியாது. மற்றவர்களின் தனிப்பட்ட எல்லைகளை மீறுவதற்குத் தங்களுக்கு உரிமை இருப்பதாக ஒருவரை நம்ப வைக்கும் அந்த மனநிலையை அல்லது சமூகப் பழக்கத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

Also Read… இரண்டு வானம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி:

மேலும் இத்தகைய அத்துமீறலைக் கண்டித்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததற்காக என்டிஆர் அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நன்றி சார். லட்சக்கணக்கான மக்கள் உற்றுநோக்கும் ஒரு நபர், தனக்கு நேரடித் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, ​​அது இத்தகைய நடத்தையை ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தக் கருத்தை வலுப்படுத்தியதோடு, இத்தகைய மனநிலைக்கும் ஒழுக்கக்கேடான செயல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுத்த சிரஞ்சீவி அவர்கள், விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read… வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்கள்.. முதல் நாளிலே ஜேசனுக்கு வைத்த ஆப்பு – புரோமோ இதோ!

Follow Us