இரண்டு வானம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்
Irandu Vaanam Movie OTT Update | தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். அந்தப் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தை இயக்குநர் சின்னா அய்யாவு எழுதி இயக்கி இருந்தார். நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நாயகியாக நடித்து இருந்தார். கட்டா குஸ்தி முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே நடிகர் விஷ்ணு விஷால் நடித்து முடித்த படம் தான் இரண்டு வானம்.
இந்த இரண்டு வானம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களுக்குப் பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற 23-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தினை இயக்குநர் ராம் குமார் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இரண்டு வானம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
இந்த நிலையில் தற்போது இரண்டு வானம் படத்தின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 26 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் அமேசான் நிறுவனம் இதன் உரிமையைப் பெற்றிருந்தாலும், சில காரணங்களால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் அந்த உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read… ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்தது தளபதி விஜயின் ஜன நாயகன் படம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VishnuVishal has completed shooting for his upcoming film IranduVaanam , directed by Ratchasan fame Ramkumar.
There is now a buzz that Netflix has acquired the OTT rights of the film for ₹26 crore. The film was initially acquired by Amazon, but the deal was reportedly called off due to certain reasons, and Netflix has now bagged the rights.
#IranduVaanam is scheduled to release on October 23rd.
Interestingly, this is the film that #MamithaBaiju initially agreed to make her Tamil debut with.
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2026
Also Read… திருமணம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டமல்ல – நடிகை அஞ்சலி