AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்த இறப்பு.. எமோஷனலாக பிரேக்-ஆன சாவன்யா வேலு – ஆறுதல் கூறிய ஜேசன்!

Bigg Boss 10 Promo: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 4 வாரங்களை கடந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (02/10/2026) வெளியான 3வது புரோமோவில் சாவன்யா கஷ்டப்பட்டது தொடர்பாக காட்டப்பட்டுள்ளது.

அந்த இறப்பு.. எமோஷனலாக பிரேக்-ஆன சாவன்யா வேலு – ஆறுதல் கூறிய ஜேசன்!
பிக் பாஸ் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Oct 2026 17:40 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றாகும். தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், தற்போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்த வாரத்தில் குமரன் ஏற்கனவே வெளியேறிய நிலையில், மேலும் 2 போட்டியாளார்கள் வெளியேறவேண்டும். அந்த வகையில் இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேறுவரை என மக்கள் எதிர்பார்கிறார்கள். மேலும் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களும் உள்ளே நுழைவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 வீட்டில் பிபி ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், அதில் சாவன்யா வேலு டாஸ்கிங் போது கதறியழுத்துள்ளார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: மேனேஜராக ஜாவீத்தை டார்கெட் செய்த லக்ஷ்மி பிரியா.. அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் லக்ஷ்மி பிரியா!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 26வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த புரோமோவில், சாவன்யா டாஸ்கின்போது தனது சித்தியின் இறப்பு குறித்து பேசியுள்ளார். தனது சித்தி, அப்பா மற்றும் அம்மாவிற்கும் மேலாக பிடிக்கும் என்றும்., அவர் கடந்த 4 நாட்களுக்கும் முன்தான் இறந்தார் எண்மரும். அவரின் இறப்பை என்னால் ஈடுகட்டமுடியவில்லை.

இதையும் படிங்க: சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில்.. ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

அன்று மற்ற போட்டியாளர்களிடம் கதறி அளித்திருந்தார். உடனே ஜேசன் அவரை சமாதானப்படுத்தியது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது சாவன்யா இதை தனது டாஸ்க்குக்கு பாதகமாக பயன்படுத்துகிறார் என்றும் பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள்.

அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு இடையே மோதல்:

அஸ்மிதா மற்றும் சாவன்யா இருவருமே ஒரே கயிற்றினால் கட்டப்பட்டுள்ள அந்நிலையில், இவர்களில் ஒரு நபர் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆகவேண்டும். அந்த விதத்தில் சாவன்யா மற்றும் அஸ்மிதா இருபவருக்கும் மத்தியில் கடும் மோதல்கள் இருக்கிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் சாவன்யா வேலு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் 3 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Follow Us