AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எல்லாரும் என்ன ட்ரிகெர் பண்ணுறாங்க.. கண்ணீர்விட்ட தன்யா – பிக் பாஸ் புரோமோ!

Dhanya Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று (01/10/2026) 25வது நாளில் தன்யாவை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்து பேசியிருந்தார். அந்த விதத்தில் தன்யா மற்ற போட்டியாளர்களால் ட்ரிகெர் செய்யப்பட்ட நிலையில், அவர் அழுதது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.

எல்லாரும் என்ன ட்ரிகெர் பண்ணுறாங்க.. கண்ணீர்விட்ட தன்யா – பிக் பாஸ் புரோமோ!
பிக் பாஸ் புரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Oct 2026 19:32 PM IST

தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss 10). இந்த நிகழ்ச்சியானது தமிழ் மொழியை கடந்து மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் 4 மொழிகளில் பிக் பாஸ் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்தது. தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட 3 வாரத்தை கடந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் சமீபத்தில் குமரன் (Kumaran) ரூ 5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது பிபி ஹோட்டல் டாஸ்க் (BB Hotel Task) நடைபெற்றுவரும் நிலையில், அதில் தன்யா, ஜாவித், லக்ஷ்மி பிரியா, அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு போன்ற போட்டியாளர்கள் இருகிறார்கள். அந்த விதத்தில் மற்ற போட்டியாளர்கள் தன்யாவை நேரடியாக தாக்கிவந்த நிலையில், அதற்காக தன்யா கண்ணீர்விட்டது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் – 22 ஆண்டுகளைக் கடந்தது ரவி மோகனின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம்!

மற்ற போட்டியார்களால் கண்கலங்கிய தன்யா:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 25 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் இந்நிகழ்ச்சியானது ஆரம்பித்து 4 வாரமான் நிலையில், பிபி ஹோட்டல் டாஸ்க் நடந்துவருகிறது. இதில் ஜாவித் மற்றும் தன்யா இருவரும் குக்கிங் டீமில் இருந்த நிலையில், தன்யாவை மற்ற போட்டியாளர்கள் மட்டம்தட்டி மற்றும் கோபத்துடன் பேசி டார்கெட் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கொஞ்சம் கூடுதல் திரை நேரம்.. ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொன்ன சிவராஜ்குமார்!

அந்த விதத்தில் அனைவராலும் டார்கெட் செய்யப்பட்ட தன்யா, தனது போட்டியாளர்களின் முன்னிலையில் கண்ணீர்விட்ட புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜாவீத்த்தின் கையைப்பிடித்து அழுத்த புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 25வது நாளில் வெளியான 4வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவராலும் குமரன் நல்ல வரவேற்கப்பட்டார். ஆனால் பணத் தொகை டாஸ்கில் ரூ 5 லட்சத்தை எடுத்துவிட்டு அவர் வெளியேறிவிட்டார். அதனால லக்ஷ்மி பிரியா மீண்டும் இந்த போட்டியில் நிலைக்கும் நிலையில், இன்னும் 2 போட்டியாளர்கள் வெளியேறவேண்டும். மேலும் நோ எவிக்ஷன் பாஸ்-வும் மூவருக்கு கிடைக்கவுள்ளதாம். அந்த 3 நோ எவிக்ஷன் பாஸை யார் வாங்குவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us