AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் – 22 ஆண்டுகளைக் கடந்தது ரவி மோகனின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம்!

22 Years Of M Kumaran S/O Mahalakshmi Movie | நடிகர் ரவி மோகன் நடிப்பில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இது தற்போது 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் – 22 ஆண்டுகளைக் கடந்தது ரவி மோகனின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம்!
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2026 17:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மோகன் ராஜா. இவர் ஜெயம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில் இயக்குநர் மோகன் ராஜா நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக வலம் வருகிறார் இயக்குநர் மோகன் ராஜா.

இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் நதியா, விவேக் மற்றும் பிரகாஷ் ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டுகளைக் கடந்தது ரவி மோகனின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி:

இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவாகி இருந்தது. அம்மா மட்டுமே வளர்த்து வந்த ரவி மோகன் தனது தந்தை மீது மிகுந்த கோபத்தில் இருப்பார். ஒரு கட்டத்தில் அம்மா உயிரிழந்துவிட அப்பாவிடம் சென்று வாழ வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அப்போது ரவி மோகன் அந்த சூழ்நிலையை எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஏழு கடல் ஏழு மலை முதல் சிக்மா வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

இயக்குநர் மோகன் ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொன்ன விமர்சனம்!

Follow Us