இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொன்ன விமர்சனம்!
Yezhu Kadal Yezhu Malai movie X review | இயக்குநர் ராம் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ராம் இயக்கத்தில் இன்று 01-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஏழு கடல் ஏழு மலை. நடிகர் நிவின் பாலி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். நடிகை அஞ்சலி நாயகியாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர் சூரியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏழுகடல் ஏழு மலை படத்திற்கு மக்களின் விமர்சனம்:
#YezhuKadalYezhuMalai 🌊
Unique & intriguing first half! Director ‘Ram’ creates an unconventional world with beautiful visuals.Nivin Pauly & Soori impress, while Yuvan’s BGM elevates the experience. Slow in places, but the setup keeps you hooked! Waiting for a strong second… https://t.co/N55Boa0eDm
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) October 1, 2026




தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான முதல் பாதி. அழகான காட்சிகளுடன் ஒரு வித்தியாசமான உலகத்தை இயக்குனர் ‘ராம்’ உருவாக்கியுள்ளார். நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்; யுவனின் பின்னணி இசை அனுபவத்தை மேலும் மெருகூட்டுகிறது. சில இடங்களில் வேகம் குறைவாக இருந்தாலும், கதையின் களம் நம்மைத் தொடர்ந்து ஈர்க்கிறது! வலுவான இரண்டாம் பாதிக்காகக் காத்திருக்கிறேன்.
ஏழுகடல் ஏழு மலை படத்திற்கு மக்களின் விமர்சனம்:
My favourite of #DirectorRam has to be Peranbu ❤️ A deeply moving film that stays with you long after it ends.
With #YezhuKadalYezhuMalai, expecting another emotionally intense and beautifully layered Ram film — especially excited to see what he brings out of Nivin Pauly and… pic.twitter.com/doN6vYCX5R
— Ramesh Bala (@rameshlaus) October 1, 2026
இயக்குநர் ராமின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பேரன்பு’தான் படம் முடிந்த பிறகும் நீண்ட காலத்திற்கு நம் மனதை விட்டு நீங்காத, ஆழமான உணர்வுகளைத் தூண்டும் படைப்பு அது. ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் மூலம், உணர்வுபூர்வமான ஆழமும் நேர்த்தியான கதைக்களமும் கொண்ட மற்றொரு சிறந்த ராம்-பாணி படத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோரிடமிருந்து அவர் எத்தகைய நடிப்பை வெளிக்கொணரப் போகிறார் என்பதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.
Also Read… தனுஷ் 56-வது படத்தின் பூஜை கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
ஏழுகடல் ஏழு மலை படத்திற்கு மக்களின் விமர்சனம்:
#YezhuKadalYezhuMalai – First Half | Ok 🙂↔️
கதை என்னனு ஒரு sneak peek-லயும், ராம் அவர்களே interview-லயும் சொல்லியிருக்காங்க. சாகா வரம் பெற்ற ஒருவரை தூக்கத்திலிருந்து சூரி எழுப்ப, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம்.
முதல் பாதி முழுக்க பெரும்பாலும் Train-லேயே… https://t.co/wPpZENAWp1 pic.twitter.com/WzK1YzZNdg
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) October 1, 2026
கதை என்னனு ஒரு ஸ்னீக் பீக்லயும், ராம் அவர்களே இண்டர்வியூலயும் சொல்லியிருக்காங்க. சாகா வரம் பெற்ற ஒருவரை தூக்கத்திலிருந்து சூரி எழுப்ப, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம். முதல் பாதி முழுக்க பெரும்பாலும் ட்ரெயின்லேயே தான் கதை நகருது. அதுல சூரி அண்ணா நிறைய ஒன் லைனர்ஸ் ட்ரை பண்ணியிருக்காங்க. ஆனா பெருசா கிளிக் ஆகல. முதல் பாதியை கடக்க கொஞ்சம் அதீத பொறுமை தேவைப்படுது. அதுவும் சூரி அண்ணா, நிவின் பாலியை தொடர்ந்து ப்ரோ ப்ரோனு கூப்பிடுறது ஒரு கட்டத்தில் கொஞ்சம் கடுப்பாகிடுது. யுவன் இசை சில இடங்களில் மட்டும் கவனம் ஈர்க்குது. அதேநேரம் காட்டுப் பகுதியில் நடக்குற காட்சிகள் நல்லா இருக்கு. குறிப்பா ப்ரீ இண்டர்வர் முதல் இண்டர்வர் வரையிலான போர்சன்ஸ் கொஞ்சம் எங்கேஜிங் இருந்தது. சினிமாட்டகிராஃபி ரசிக்க வைக்குது.
Also Read… அது எனக்கு மனவேதனையை அளித்தது… டோரதி படத்திற்கான நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய நடிகர் சனந்த்