சுற்றுலா தலமாக மாறியது தளபதி விஜயின் லியோ படத்தில் வந்த இடம் – குவியும் ரசிகர்கள்!
Leo Movie Cafe turned tourist spot | தற்போதைய முதலமைச்சரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வரும் ஒரு இடம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அந்த இடத்திற்கு தொடர்ந்து ரசிகர்களின் கூட்டம் அதிகமா வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தென்னிந்திய மொழிகளில் உள்ள நடிகர்களின் படங்களையும் இயக்கி வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் தளபதி விஜயை வைத்து முதலாவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய படம் மாஸ்டர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி லியோ படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜயின் ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சஞ்சை தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், ஜார்ஜ் மரியம், மேத்யூ தமாஸ், இயல், மடோனா செபாஸ்டின், மன்சூர் அலி கான், ப்ரியா ஆனந்த், சாண்டி, மதுசூதன் ராவ், தினேஷ் மாஸ்டர், வையாபுரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா தலமாக மாறியது தளபதி விஜயின் லியோ படத்தில் வந்த இடம்:
மேலும் இந்த லியோ படத்தில் நடிகர் தளபதி விஜய் காஷ்மீரில் ஒரு கஃபே நடத்தி வருவது போல காட்டியிருந்தனர் படத்தில். இந்த கஃபே படத்திற்காக போடப்பட்ட செட் கிடையாது. உன்மையாகவே அந்த பகுதியில் இருக்கும் கஃபே ஆகும். ஆம் காஷ்மீரில் அனந்த்நாக் என்ற ஒரு பகுதி உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிஃபர் கஃபே தான் லியோ திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜயின் கஃபேவாக காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போதும் அந்த பகுதிக்கு ரசிகர்கள் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.




Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படக்குழு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
படம் வெளியான போது அதிகப்படியான ரசிகர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த லியோ படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது அக்டோபர் மாதம் வந்தால் 3 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால் தற்போதும் இந்த இடத்திற்கு ரசிகர்கள் படையெடுப்பது குறையவே இல்லை. மேலும் இது ஒரு சுற்றுலா தலமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.