Anbil Avan: அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்!
Anbil Avan Movie Censor Update: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அசோக் செல்வன். இவரின் நடிப்பில் ஓராண்டுக்கு பின் வெளியாக காத்திருக்கும் படம் அன்பில் அவன். இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் மற்றும் சென்சார் அப்டேட் குறித்து விவரமாக காணலாம்.
கோலிவுட் சினிமாவில் சிறந்த இளம் நடிகர்களில் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் அசோக் செல்வன் (Ashok Selvan). வித்தியாசமான காதல் கதைக்களம் மற்றும் ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இறுதியாக இவர் மணிரத்தினத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான தக் லைஃப் (Thug Life) படத்தில் நடித்திருந்தார். இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த திரைப்படம்தான் அன்பில் அவன். இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) நடித்துள்ளார். இந்த படமானது மிகவும் அதிரடியான காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் (R. Kaarthikeyan) இயக்க, அசோக் செல்வன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளார்.
இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இதன் சென்சார் அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: 90ஸ்-ல் அவரின் அப்பாவை பார்த்ததுபோலவே… ஜேசன் சஞ்சய் குறித்து புகழ்ந்து பேசிய தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி!
அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் தெரியுமா?:
இப்படமானது அதிரடியான காதல் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் அசோக் செல்வன் அதிரடி காதலானாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட பல சவாழ்க்கையும் மேற்கொண்டுள்ளார். அந்த விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது.
இதையும் படிங்க: நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு யு/ஏ +16 என்ற சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி இப்பதற்கு 16 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகள் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பில் அவன் படத்தின் சென்சார் அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
The certificate says UA. His love says, “No limits.” #AnbilAvan in theatres worldwide from October 2nd!
Starring @AshokSelvan @PreityMukundan.
Directed by @Karti6Kane.A #GovindVasantha Musical.@Ayngaran_offl @HappyHighPic @abinaya_selvam @kav_pandian @vigneshraja89… pic.twitter.com/1FAvFw8WWP
— Think Music (@thinkmusicindia) September 26, 2026
இந்த படமானது அசோக் செல்வனின் நடிப்பில் அதிக பட்ஜெட் கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படமாம். இதில் ப்ரீத்தி முகுந்தன் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு தற்போது சென்சார் அப்டேட் வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.