AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வசூலில் 125 கோடியை கடந்து சாதனைப் படைத்து வருகிறது சூரியின் மண்டாட்டி – கொண்டாட்டத்தில் படக்குழு

Mandaadi Movie Box Office Collection Update | நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படம் தற்போது வரை உலக அளவில் பல கோடிகளை வசூலித்து தொடர்ந்து சாதனைப் படைத்து வரும் நிலையில் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

வசூலில் 125 கோடியை கடந்து சாதனைப் படைத்து வருகிறது சூரியின் மண்டாட்டி – கொண்டாட்டத்தில் படக்குழு
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Sep 2026 11:04 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி நடிகர்கள் நாயகன்களாகவும், இயக்குநர்கள் நாயகன் மற்று கதாப்பாத்திர நடிகர்களாகவும் நடித்து மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடியனாக உச்சத்தில் இருந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் சூரி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். காமெடியனாக கொண்டாடிய தமிழ் சினிமா ரசிகர்கள் சூரியை நாயகனாகவும் கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு சாட்சி தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவதே ஆகும்.

அந்த வகையில் நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் இரண்டு மொழிகளில் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகின்றது.

வசூலில் 125 கோடியை கடந்து சாதனைப் படைத்து வருகிறது மண்டாட்டி:

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கிய இந்த மண்டாட்டி படம் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகின்றது. இந்த நிலையில் மண்டாட்டி படம் உலக அளவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி படம் உலக அளவில் ரூபாய் 125 கோடிகளை கடந்து தொடர்ந்து வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்… இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ வீடியோ

மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் சாதனைப் படைத்த விஸ்வநாத் & சன்ஸ் படம்… மகிழ்ச்சியில் படக்குழு – வைரலாகும் போஸ்ட்

Follow Us