பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜேசனைப் பார்த்து துப்பிய ஷமா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளராக நுழைந்த ஷமா மற்றும் ஜேசன் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மிகவும் அதிகமாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த 2026-ம் ஆண்டி தொடங்குவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி குழு காமென் மேன் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல நினைக்கும் சாதாரண மக்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த நிலையில் அவர்களில் இருந்து 50 போட்டியாளர்களை தேர்வு செய்து போட்டியை நடத்தினர். அதில் இறுதியில் சிலரை மட்டுமே தேர்வு செய்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு போட்டி தொடங்கிய முதல் நாள செப்டம்பர் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு மூன்று பேரை மட்டுமே காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து உள்ளே அனுப்பினர். அப்படி உள்ளே அனுப்பப்பட்டவர்கள் தான் ஜேசன், ஷமா மற்றும் முனியம்மா. அதனைத் தொடர்ந்து மணிவண்ணன் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார்.
அவர் கடந்த வாரம் நடைப்பெற்ற எவிக்ஷனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த ஜேசன், ஷமா மற்றும் முனியம்மா தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் மூவருக்கும் இடையே அவ்வபோது சண்டைகள் நடைப்பெற்று வந்தாலும் இதில் அதிக அளவில் ஷமா மற்றும் ஜேசன் இடையே சண்டை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் ஜேசனைப் பார்த்து துப்பிய ஷமா:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 17-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஷமா டாஸ்கின் போது ஜேசனைப் பார்த்து துப்பியது மட்டும் இன்றி அவரிடம் கடுமையாக பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்றைய டாஸ்க் தீயாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அந்த நடிகை டிராகன் படத்தில் நடிக்க நோ சொல்லிட்டாங்க.. அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த விஷயம்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day17 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/lxn89ETRDq
— Vijay Television (@vijaytelevision) September 23, 2026
Also Read… இன்று தேசிய விருதினை பெறும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார்? எந்தப் படத்திற்காக தெரியுமா?