பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்… உடைந்து அழுத சாந்தினி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்றாவது வாரம்தான் சென்றுகொண்டு இருக்கின்றது. ஆனால் இந்த சீசன் தொடங்கியதி இருந்தே தொடர்ந்து இறுதி வாரம் போல போட்டியாளர்களிடையே அதிக அளவில் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரம் சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இரண்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து வைல்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டு 19 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இரண்டாவது வாரம் போட்டியாளர்களால் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓட்டிங்கில் மக்களிடையே குறைவான வாக்கு பெற்றதாக ஒருவர் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த மூன்றாவது வார கேப்டனாக அவினாஷ் தேர்வாகி உள்ள நிலையில் போட்டியாளர்களிடையே போட்டியும் அதிக அளவில் சூடுபிடித்துள்ளது.
நேற்றைய எபிசோடுல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் மற்றும் ஒவ்வொரு துறையின் அணியை பிரிப்பதிலேயே சென்றுவிட்ட நிலையில் இன்று பிக்பாஸ் வழங்கிய டாஸ்க் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. அது ஒவ்வொரு புரோமோவும் வெளியாகும் போது அது எந்த மாதிரியான டாஸ்க் என்பது தெரிகிறது.




பிக்பாஸில் உடைந்து அழுத சாந்தினி – வைரலாகும் வீடியோ:
அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 16-வது நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அந்த வீடியோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகின்றது. அது என்ன என்றால் குறிப்பிட்ட சில வாசங்கள் அடங்கிய டாக் கொடுக்கப்படுகின்றது. அதாவது ட்ராமா குயின், சிம்ப்லி வேஸ்ட், மிக்சர் மாமா என்று அதன்படி அந்த வார்த்தைகள் எந்த போட்டியாளருக்கு பொருந்தும் என்று மற்ற் போட்டியாளர்கள் கூறவேண்டும். அதில் சிம்ப்லி வேஸ்ட் என்ற டாக் சாந்தினிக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதனை நினைத்து அவர் உடைந்து அழுகிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அக்கா அம்பிகா மீது மோசடி புகார் அளித்த நடிகை ராதா – என்ன நடந்தது?
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day16 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/SG9SZTk0qE
— Vijay Television (@vijaytelevision) September 22, 2026
Also Read… பிக்பாஸில் சாப்பாட்டு விசயத்தில் அன்சர் மற்றும் சாதிகா இடையே சலசலப்பு – என்ன செய்வார் லீடர்