AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்றாவது ஒரு நாள் உங்களை இயக்க விரும்புகிறேன் – அஸ்வத் மாரிமுத்து சொன்னது யார் தெரியுமா?

Director Ashwath Marimuthu want to direct that actor | தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படத்தின் நாயகனை வைத்து படம் இயக்க விரும்புவதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

என்றாவது ஒரு நாள் உங்களை இயக்க விரும்புகிறேன் – அஸ்வத் மாரிமுத்து சொன்னது யார் தெரியுமா?
அஸ்வத் மாரிமுத்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2026 16:08 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இதுவரை ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகானாக நடித்து வருகிறார். இது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள 173-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தர்மன் படத்தின் படப்பிடிப்பு பிசியாக இருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் மொத ராத்திரி படத்தைப் பார்த்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

என்றாவது ஒரு நாள் உங்களை இயக்க விரும்புகிறேன் – அஸ்வத் மாரிமுத்து:

மேலும் அந்தப் பதிவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளதாவது, ரிஷிகாந்த் என்ற இளம் நடிகரை நான் ஆதரிக்கிறேன். அவருடைய நடிப்பை ‘டெம்பிள் மங்கி’ காலத்திலிருந்தே பார்த்திருக்கிறேன், அவர் மிகவும் திறமையானவர். ‘மோதா ரதிரி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஒருநாள் உங்களை இயக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Vijay Sethupathi: டாஸ்கில் லீடர் என்ற அட்வான்டேஜ்.. ஷமாவை வெளுத்துவாங்கிய விஜய் சேதுபதி!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: என்னால் நம்பமுடியால.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா.. உறுதி செய்த விஜய் சேதுபதி!

Follow Us