AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேரடியாக நாமினேஷனுக்கு தள்ளப்பட்ட ராகவ்.. முனியம்மாள் சாடிய சாத்விகா – பரபரப்பாகும் பிக் பாஸ்!

Satvika And Muniyammal: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 13 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கியதிலிருந்தே சண்டையில் இருக்கிறது. இந்நிலையில் வரும் வாரத்திற்கு நேரடியாக ராகவ் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், முனியம்மாள் மீது சாத்விகா கோபப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நேரடியாக நாமினேஷனுக்கு தள்ளப்பட்ட ராகவ்.. முனியம்மாள் சாடிய சாத்விகா – பரபரப்பாகும் பிக் பாஸ்!
பிக் பாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Sep 2026 17:25 PM IST

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி 2வது வாரத்தை எட்டிய நிலையில், பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், மேலும் இரு வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். மேலும் முதல் வாரத்தில் பிளாக் பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். அந்த விதத்தில் இந்த வாரத்தின் நாமினேஷனில், தான்யா, ஷாமா போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். அந்த விதத்தில் இந்த மூவரில் யார் வெளியேற்றப்படுவார் என மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

அந்த விதத்தில் இந்த வராத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்குகளை யார் சரியாக செய்யவில்லையே, அவரை அடுத்தவாரத்திற்காக நேரடியாக நாமினேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் டைனிங் அறையயை சுத்தமாக வைத்திருக்காததால் ராகவ்வை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். இதற்கு சாத்விகா கோபப்பட்டுளார் இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கதையைக் கேட்காமலேயே ஓகே சொல்லிட்டேன்.. வேட்டுவம் படம் குறித்து பேசிய ஆர்யா!

முனியம்மாளிடம் கோபத்தில் கொந்தளித்த சாத்விகா:

டைனிங் அறையை சரியாக பார்த்துக்கொள்ளாத ராகவ்வை சக போட்டியாளர்கள் நேரடியாக அடுத்த வாரத்திற்கான நாமினேஷனுக்கு நாமினேட் செய்திருந்தனர். இந்நிலையில் இதற்கெல்லாம் காரணமாக முனியம்மாளை சாத்விகா சாடியுள்ளார்.

டைனிங் அறையை சரியாக சுத்தம் செய்யாதது முனியம்மாள் என்ற நிலையில், அவரை சாத்விகா கோபத்தில் பேசியுள்ளார். ராகவ் அண்ணா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டதற்குமுக்கியமான காரணம், நீங்கள் பொறுப்பாக இல்லாததுதான் என அவரை கோபமாக திட்டியுள்ளார். இதற்கு முனியம்மாள் தன்னுடைய சுயநலத்தை கட்டும்படியாக பேசியுள்ளார்.

விரிவாக படிக்க: நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில் அவர் கலக்கி வருகிறார்.. முதல்வர் விஜய் குறித்து பேசிய நானி!

முனியம்மாள் சாத்விகா கோபமாக பேசியதாக வெளியான பிக் பாஸ் சீசன் 10 13வது நாளின் 3வது புரோமோ :

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியானது தொடங்கி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. முனியம்மாளால் வீட்டில் பல பிரச்சனைகள் எழுந்துவருகிறது. அந்த விதத்தில் முனியம்மாள் மீது வெளியே உள்ள ரசிகர்களே, அவர் எப்போது வெளியேறுவார் என விமர்சித்துவருகிறார்கள்.

Follow Us