முனியம்மாவால் முட்டிபோட்டு நடக்கும் வினோத் பாபு.. என்ன நடக்குது பிக்பாஸில்…?
Big Boss Promo:பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக வெளியாகிவரும் நிலையில், இப்போதே போட்டியளர்கள் மத்தியில் சண்டைகள் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் வினோத் பாபு கேட்காமல் நாற்காலியை எடுத்த காரணத்தினால், அவரை முட்டிபோட்டு முனியம்மாள் நடக்க வைத்த புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக மூன்றாவது முறையாக நடத்திவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 1). இந்நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவருவது வழக்கமே. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியானது தமிழில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்களை நெருங்கும் நிலையில், தற்போதிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் போட்டிகள் வலுக்கிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு காவலாளி இருக்கும் நிலையில், அங்குள்ள பொருட்களை பயன்படுத்த மற்றும் அதை எடுப்பதற்கு அவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும். நேற்று (17/09/2026) பாத்ரூமை பயன்படுத்த மணிவண்ணன், வினோத் பாபுவிடம் அனுமதி கேட்ட நிலையில், அவர் கொடுத்த டாஸ்க் காரணத்தினால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார்.
அந்த விதத்தில் இன்று (18/09/2026), பிக் பாஸ் டைனிங் அறையில் உள்ள நாற்காலியை வினோத் பாபு அனுமதி கேக்கப்டாமக் எடுத்த நிலையில், அவருக்கு முனியம்மாள் கொடுத்த டாக்ஸ் சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பகலவன் படத்தை அந்த நடிகரை வைத்து இயக்க நினைத்தேன் – சீமான் சொன்ன விசயம்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 12வது நாளின் முதல் புரோமோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
#Day12 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/GyyVgzh56d
— Vijay Television (@vijaytelevision) September 18, 2026
இந்த புரோமோவில், வினோத் பாபு, டைனிங் ஏரியாவில் உள்ள நாற்காலியை முனியம்மாள் அனுமதி இல்லாமல் எடுத்துள்ளார். இதை பார்த்த முனியம்மாள், வினோத் பாபுவை முட்டிபோட்டு நடக்க சொல்லியிருந்தார். இதை ஆரம்பத்தில் செய்ய மறுத்த வினோத் பாபு, பின் அதை செய்திருந்தார். இது சக போட்டியாளர்கள் மத்தியில் முனியம்மாள் மீது மேலும் கோபத்தை ஏற்படுத்திவருகிறது. தற்போது இது குறித்த புரோமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சூரி எப்டி எப்டி.. மண்டாடி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து பகிர்ந்த சூரி!
பிக் பாஸில் ஏற்பட்ட மாற்றங்கள்:
பொதுவாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் கிட்டத்தட்ட 50 நாட்கள் அல்லது 20 நாட்கள் கடந்தே நிகழ்ச்சிக்கும் நுழைவார்கள். ஆனால் இந்தமுறை பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 4வது நாளிலே மணிவண்ணன் மற்றும் ஒரு வாரத்திற்கு பிறகு ஆனந்தி போன்றோர் நுழைந்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியானது தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.