AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இதுதான் ஜன நாயகமா? பிக்பாஸில் லீடரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10 நாட்கள் நிறைவடைந்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று 11-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

இதுதான் ஜன நாயகமா? பிக்பாஸில் லீடரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Sep 2026 10:26 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் நிலையில் போட்டியாளர்கள அனைவரையும் அறிமுகபடுத்தி வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் இரண்டு பேர் வெளியேறினர். அதன்படி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாகவும் மற்றொருவர் வீட்டில் இருந்து எவிக்டாகியும் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களாக இரண்டு பேர் உள்ளே அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர். தொடர்ந்து இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே இறுதி வாரம் என்பது போல போட்டி அதிக அளவில் சூடு பிடித்துள்ளது. முதல் வாரம் மந்தமாக இருந்த போட்டியாளர்கள் இந்த இரண்டாவது வாரம் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தினமும் புதுப் புது விசயங்களும் நடைப்பெற்று வருகின்றது.

பிக்பாஸில் லீடரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இன்று 11-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வீடியோவில் டெமோகிரசி அறையில் இந்த வாரம் வீட்டின் லீடராக உள்ள ஷமாவிடம் மற்ற போட்டியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு லீடராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று இல்லாமல் மற்ற போட்டியாளர்களிடையே டீல் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் இதுதான் ஜன நாயகமாக என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு ஷமாவும் இதுதான் ஜன நாயகம் என்று கூற அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 20 இயர்ஸ் ஆஃப் லவ் அண்ட் வார்… திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா தம்பதி!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பவர் ஹவுஸ் படத்தில் ரியா ஷிபுவின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?

Follow Us