AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

20 இயர்ஸ் ஆஃப் லவ் அண்ட் வார்… திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா தம்பதி!

Suriya - Jyothika celebrating 20 wedding anniversary | சினிமாவில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களது 20-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

20 இயர்ஸ் ஆஃப் லவ் அண்ட் வார்… திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா தம்பதி!
சூர்யா - ஜோதிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2026 06:30 AM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெரும் ரீல் ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் அதற்கு முன்பு பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் முதலில் வீட்டில் தெரிந்த போது சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் சம்மதிக்கவில்லை என்று செய்திகள் வலம் வந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகே சிவக்குமார் சூர்யா – ஜோதிகாவின் திருமணத்திற்கு சம்மதித்தார். இதுகுறித்து சிவக்குமாரே பேட்டிகளில் வெளிப்படையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி காதலில் பல போராட்டங்களுக்குப் பிறகு சேர்ந்த நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி நிஜ வாழ்க்கையில் பலருக்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே திருமணம் முடிந்து சுமார் 20 ஆண்டுகளாக மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அது தொடர்பாக அவர்கள் பல பேட்டிகளில் பேசும் போது அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யா குறித்து பல பேட்டிகளில் பேசியதும் தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

20-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா தம்பதி:

இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களது 20-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். அவர்கள் இருவரும் 20-ம் ஆண்டில் கிருஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துள்ளார்கள். இந்த திருமண விழாவில் தங்களது மகன் மற்றும் மகள் உட்பட குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த 20 ஆண்டுகால வாழ்க்கை மற்றும் அனுபவம் குறித்து நடிகை ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

Follow Us