AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சினிமாவில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… கொண்டாடும் ரசிகர்கள்

29 Years Of Suriya | தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது 29 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில் ரசிகர்களும் திரையுலகினர் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா… கொண்டாடும் ரசிகர்கள்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2026 16:43 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் சூர்யா தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா ஒரு நடிகரின் மகனாக இருந்தாலும் அவர் ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் நடிப்பதை குறித்து யோசிக்க கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் கல்லூரி படிப்பை முடித்த உடன் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக பணிக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். அப்போதுதான் இயக்குநர் வசந்த் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியுள்ளார்.

சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் ஆகும். இவரி சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகும் போது இவர் அறிமுகம் ஆன நேருக்கு நேர் படத்தை இயக்குநர் மணிரத்னம் தான் தயாரித்து இருந்தார். அவர்தான் சரவணனாக இருந்தவருக்கு சூர்யா என்று பெயர் வைத்தார். அதன்பிறகு இவரை அனைவரும் சூர்யா என்றே அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா:

அதன்படி கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான படம் நேருக்கு நேர். இந்தப் படத்தினை இயக்குநர் வசந்த் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் சூர்யா நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜயும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நடிகர் சூர்யா திரையரங்குகளில் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 29 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… கொடியை கொடுங்கள் கோட்டையை பிடிப்போம் – ரவி மோகன் ரசிகர் மன்ற விழாவில் பரபரப்பு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Silambarasan: எத பற்றியும் பயப்படாதீங்க.. ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சிலம்பரசன்!

Follow Us