AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவுடன் ஜோடியாக இணையும் டிசி பட நடிகை?.. இயக்குநர் இவரா?

Suriya49 Update: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான படம் உருவாகிவரும் நிலையில், இவரின் புதிய படத்தில்; டிசி பட நடிகை ஜோடியாகிறாராம். அது எந்த படம், யார் இயக்குநர் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சூர்யாவுடன் ஜோடியாக இணையும் டிசி பட நடிகை?.. இயக்குநர் இவரா?
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Sep 2026 17:08 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமாக திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என்ற படம் வெளியானது. இதை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த 2026ம் ஆண்டில் மட்டும் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியானது கருப்பு (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இந்த இரு படங்களும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்த படத்திற்கு பின் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில், சூர்யா47 (Suriya47) மற்றும் இயக்குநர் ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில் சூர்யா48 போன்ற படங்கள்;ஐ தனது கைவசம் சூர்யா வைத்துள்ளார். இந்நிலையில் இவரின் 49வது (Suriya49) திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகி யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி

சூர்யாவை 49வது திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி யார் :

நடிகர் சூர்யாவின் நாடியுபில் இதுவரை மொத்தம் 46 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா தனது 48வது திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் இவரின் 49வது படத்தை இயக்குபவர் யார் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. சூர்யாவின் 49வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளாராம்.

இதையும் படிங்க: ஐ அம் கேம் முதல் இம்மார்டல் வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

மேலும் டிசி படத்தில் நாயகியாக நடித்து மக்களிடையே பிரபலமான வாமிகா கபி இப்படத்தில் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதகாவும் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

சூர்யாவின் 49வது திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி குறித்து இணையத்தில் பரவும் எக்ஸ் பதிவு:

சூர்யா தற்போது இயக்குநர் ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில், சூர்யா48 படத்தில் பணியாற்றிவருகிறார். இதில் கயாடு லோஹர் நாயாகியாக நடிக்க, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணியாற்றுகிறாராம். இதை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இந்த படமானது உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

Follow Us