வசூலில் பட்டையை கிளப்பும் விஸ்வநாத் & சன்ஸ் படம் – எத்தனை கோடிகள் தெரியுமா?
Vishwanath And Sons Movie Box office Collection | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வசூல் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அமோக வரவேற்பைப் பெறுவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளது. அதன்படி முதலாவதாக சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த நிலையில் தற்போது இரண்டாவதாக வெளியான படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார்.




ஃபேமிலி எண்டெர்டெய்ன்மெண்ட் படமாக திரையரங்குகளில் வெளியான இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 240 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Dorothy: முத்துமணி…. கீர்த்தி சுரேஷின் டோரதி படத்தின் 2வது பாடல் வெளியானது!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Some bonds hold strong… and this is what the Audience, Sanjay Vishwanath and his Family have built with ❤️❤️#VishwanathAndSons crosses 240 CRORES+ WORLDWIDE GROSS and still going strong 💥💥 #BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri… pic.twitter.com/CShvwwg8rz
— Sithara Entertainments (@SitharaEnts) August 30, 2026
Also Read… 25 வருச உழைப்பு… சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி