AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Actor Suriya | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் அவரது 49-வது படத்தை இயக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு இந்த 2026-ம் ஆண்டு சினிமாவில் உச்சமாக கூறும் அளவிற்கு அவரது படங்களில் இதுவரை வெளியான படங்களை விட இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலாவதாக வெளியான கருப்பு படம் இதுவரை சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக உள்ளது என்று சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களும் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போதும் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்த 47-வது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடும் இந்த 2026-ம் ஆண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 48-வது படத்திற்காக இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்?

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 49-வதாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது வெளியான தகவலின்படி சூர்யா மற்றும் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் கூட்டணி ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் முன்-தயாரிப்புப் பணிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயக்குநர் யார் என்றால் மலையாள சினிமாவில் முன்னதாக வெளியான ஆர்டிஎக்ஸ் மற்றும் தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள ஐ அம் கேம் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்? வைரலாகும் தகவல்

Follow Us