Mandaadi: படகு போட்டி கதையில்.. சூரியின் மண்டாடி திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!
Mandaadi Movie Teaser: நடிகர் சூரியின் நடிப்பிலும், அறிமுக இயக்குநர் புகழேந்தி மதிமாறன் இயக்கத்திலும் உருவாகியுள்ள கடல் சார்ந்த கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்தான் மண்டாடி. இந்த படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இன்று (25/08/2026) இப்படத்தின் அதிரடி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் துணை நடிகர், நகைச்சுவை நடிகராக நடித்து, தற்போது சினிமாவில் லீட் நாயகனாக நடித்துவருபவர் சூரி (Soori). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன் (Maaman). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படமானது சூரிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் சூரியின் நடிப்பில் உருவாகிவரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, ஆர்.எஸ்.என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியிருக்கிறது.
மேலும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் இந்த படமானது வெளியாகி காத்திருக்கிறது. அதை முன்னிட்டு இன்று (25/08/2026) படக்குழு மண்டாடி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இது தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: உலகம் முழுவதும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழில் வெளியிடும் படக்குழு – வைரலாகும் பதிவு
சூரியின் மண்டாடி திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Here, we present to you the world of #Mandaadi. 🌊🔥#Mandaadi Teaser is here! 🎬🔥
Link 🔗 – https://t.co/4a2LUWPVzY#Mandaadi in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥
#Suhas #sathyaraj @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5
@bala_actor @Kritika_Bala… pic.twitter.com/t7k3a60VxD— Actor Soori (@sooriofficial) August 25, 2026
சூரி மற்றும் மஹிமா நம்பியாரின் மண்டாடி திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்கு:
இந்த மண்டாடி திரைப்படமானது, முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி காட்சிகளில் உருவாகியுள்ளது. இப்படம் படகு போட்டியை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. இந்த படமானது படகு போட்டியினால் வரும் சண்டைகள் மற்றும் அதிரடி காட்சிகளை மையமாக வைத்து இந்த மண்டாடி படமானது உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சூரியின் மண்டாடி படத்திற்கு சென்சார் கொடுத்த அப்டேட்:
நடிகர் சூரி லீட் நாயகனாக அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஹிமா நம்பியார் இணைந்து நடித்துள்ளார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட நடிகர் மிதுன் ஜெய் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில், மண்டாடி மண்டாடி மற்றும் உசுரே நீதான் புள்ள போன்ற பாடல்களும் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது!
மேலும் தற்போது வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அதிரடி ஆக்ஷன், திரில்லர் பாணியில் உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும், இந்த படத்திற்கு யு/ ஏ தரச் சென்சார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை பார்க்கலாம்.