AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mandaadi: உசுரே நீதான் புள்ள… சூரி – மஹிமா நம்பியாரின் மண்டாடி பட 2வது பாடல் வெளியீடு!

Usure Needhan Pulla Song: நடிகராக சூரி நடித்துள்ள புத்தம் புது ஆக்ஷன் திரைப்படம்தான் மண்டாடி. இதை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, உசுரே நீதான் புள்ள என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Mandaadi: உசுரே நீதான் புள்ள… சூரி – மஹிமா நம்பியாரின் மண்டாடி பட 2வது பாடல் வெளியீடு!
உசுரே நீதான் புள்ள பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Aug 2026 20:02 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வளர்ந்துவருபவர் சூரி (Soori). சினிமாவில் ஆரம்பகாலத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்த இவர், தனது 44வது வயதிலே சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் வெளியான விடுதலை (Viduthalai) படத்தின் மூலம் கதாநாயகனாக நிலையில், அதை தொடர்ந்து புது புது படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். இவர் ஹீரோவாக நடிக்க, இறுதியாக வெளியான படம் மாமன் (Maaman). கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கத்தில், சூரி இணைந்த படம் மண்டாடி (Mandaadi). முற்றிலும் ஆக்ஷன் மற்றும் கடல்சார்ந்த அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். இதில் சூரி நாயகனாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹாஸ் (Suhas) என்பவர் நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார்.

இது இரு கப்பல் அணியிடையே நடக்கும் மோதல்கள் குறித்த கதையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் சூரிக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார்வ் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் இசையில், மண்டடைய பட 2வது பாடலான உசுரே நீதான் புள்ள வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஷாலின் மகுடம் திரைப்படம் சொதப்பலா? இல்ல சூப்பரா? – விமர்சனங்கள் இதோ!

உசுரே நீதான் புள்ள பாடல் குறித்து மண்டாடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மண்டாடி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் சென்சார் அப்டேட்:

இந்த மண்டாடி படமானது இரு கப்பல் போட்டியில் ஈடுபடும் அணிகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் குறித்த கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூரி ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடித்துள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர் தமிழில் சாட்டை, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டாடி படமானது சூரி ஹீரோவாக இதுவரை நடித்திருந்த படங்களை விடவும் அதிக பட்ஜெட்டும். இப்படம் சுமார் ரூ 75 முதல் ரூ 80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: நானே ஒரு ரசிகன்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு!

இப்படம் முழுக்க கடற்கரை மற்றும் ஆழ்கடலில் படப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் பட்ஜெட் அதிகமாக உள்ளதாம். இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், யு/ஏ தர சென்சார் கிடைக்கும் என் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us