AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Magudam: விஷாலின் மகுடம் திரைப்படம் சொதப்பலா? இல்ல சூப்பரா? – விமர்சனங்கள் இதோ!

Magudam Movie Review: தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருபவர் விஷால். இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புது படம் மகுடம். இதில் அவர் மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ள நிலையில், இன்று (14/08/2026) உலகெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

Magudam: விஷாலின் மகுடம் திரைப்படம் சொதப்பலா? இல்ல சூப்பரா? – விமர்சனங்கள் இதோ!
மகுடம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Aug 2026 14:09 PM IST

நடிகர் விஷால் (Vishal) தமிழ் சினிமாவிலும், மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் சினிமாவில் நாயகனாக 20 வருடங்களுக்கும் மேலாக பயணித்துவரும் நிலையில், தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவரின் இயக்கத்தில் மகுடம் (Magudam) என்ற படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த மகுடம் படத்தில் விஷால் மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் அஞ்சலி (Anjali) மற்றும் துஷாரா விஜயன் (Dushara Vijayan) போன்ற நடிகைகளும் நடித்துள்ளார்கள்.

இந்த மகுடம் படமானது இன்று, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?

புரட்சி தளபதி விஷாலின் மகுடம் திரைப்படம் எப்படி இருக்கு:

மகுடம் படத்தில் விஷால் மொத்தமாக 3 வேடங்களில் நடித்துள்ளார். இயக்குனராகவும் நடிகராகவும் இந்த படத்தில் அவர் தனது சிறப்பான பணிகளை செய்துள்ளார். ஆனால் இந்த படத்தில் கதை வாரியாக பல சொதப்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தொடக்கமே மெதுவாக செல்வதுபோல இருக்கிறதாம். மேலும் படத்தின் இடைவேளைக்கு முன்புள்ள 15 நிமிட காட்சிகளிலிருந்தே சூடுபிடிக்க தொடங்குகிறதாம். இப்படம் கிட்டத்தட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

மகுடம் படத்தின் ஆணிவேராக இருக்கும் ஜி.வி. பிரகாஷ்:

விஷாலின் மகுடம் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்தான், அதுவே படத்தை பெருமளவில் காப்பாற்றியுள்ளதாம். மேலும் இந்த படத்தில் கதைவாரியாக சில ஏற்பட்ட இரங்கங்கள் இருந்தாலும், ஜி.வி. பிரகாஷின் இசை அதை பலப்படுத்துவதுபோல அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சூரியின் மண்டாடி பட ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் புரோமோ வெளியீடு!

மகுடம் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்க:

இதில் விஷால் நடித்துள்ள 3 வேடங்களில், முதல் இரு வேடங்கள் மட்டுமே முதல் பாதியில் காட்டப்படுகிறது. மேலும் இடைவேளைக்கு பின் 3வது வேடமும் காட்டப்படுகிறதாம். இதில் அஞ்சலி அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பெண்கள் இணைந்து சண்டையிடும் காட்சிகள் உள்ளதாம்.

மகுடம் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா?:

இந்த மகுடம் படமானது ஆக்ஷ்ன், மற்றும் அதிரடி காட்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால் ஆக்ஷன் மற்றும் அதிரடி படங்களை விரும்புவபர்கள் திரையரங்குகளில் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us