Vishal: மற்ற நடிகர்கள் தோல்வியடைந்த அரசியலில் விஜய் வெற்றி பெற்றது எப்படி?- விஷால் விளக்கம்!
Vishal On CM Vijays Political Success: தென்னிந்திய சினிமாவின் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஷால். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்துவருகிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து மற்றும் மற்ற நடிகர்களின் அரசியல் எண்ணம் தோல்வியில் முடிந்தது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஷால் (Vishal) தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமாக பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் சிறப்பாக உருவாகியுள்ள புது படம்தான் மகுடம் (Magudam). இதை விஷால் இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ப்ரோமோஷனில் விஷால் தீவிரமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியிருந்தார்.
அதில் முதல்வர் விஜய்யின் (CM Vijay) அரசியல் வெற்றி மற்றும் மற்ற நடிகர்களின் அரசியல் நுழைவு தோல்வியை பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதில் அவருக்கு முன் பல நடிகர்களின் அரசியல் முயற்சிகளைப் போல் இல்லாமல், விஜய்யின் அரசியல் பிரவேசம் ஏன் வேகம் பெற்றது என்பது குறித்த தனது பார்வையையும் விஷால் பகிர்ந்து கொண்டார்.




இதையும் படிங்க: டிசி படத்தின் மீது வைத்த நம்பிக்கை… கலாநிதி மாறனை சந்தித்து நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!
முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து விஷால் பகிர்ந்த எக்ஸ் பதிவு:
Wishing our Hon CM Vijay, (@CMOTamilnadu) a very happy birthday. Completely different birthday and celebrations from all these years. This time the wishes will be flowing from all quarters of the World as always wishing U good health, peace and prosperity and also wishing U the… pic.twitter.com/6SjX4OWrQC
— Vishal (@VishalKOfficial) June 22, 2026
முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றி மற்றும் மற்ற நடிகர்களின் அரசியல் தோல்வி குறித்து விஷால்:
அந்த பேட்டியில் விஷால், “இது நடிகர்களுக்கு மட்டும் அல்ல. அதிக செல்வாக்குள்ள நடிகர்கள் இதற்கு முன்பே இதை முயற்சித்திருக்கிறார்கள். நாம் குறிப்பிடத் தவறிய, தோல்வியடைந்த இன்னும் பல உதாரணங்கள் இருக்கிறது. சிவாஜி கணேசன் ஒரு கட்சியைத் தொடங்கினார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் ஒரு கட்சியைத் தொடங்கினார். திரையுலகம் முழுவதும் நமக்கு உதாரணங்கள் இருகிறார்கள். அமிதாப் பச்சனால் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்க முடியும். மிதுன் சக்ரவர்த்தி மிகவும் பிரபலமானவர், அவர் மேற்கு வங்கத்தின் முகமாக இருந்திருக்க முடியும்.
இதையும் படிங்க: பேக் இன் ஆக்ஷன்.. சிறப்பாக தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட அடுத்த செட்யூல் ஷூட்டிங்!
ஆனால் இது ஒரு அழைப்பு, யாராவது விஜய் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அது அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் என்பதற்காக மட்டுமல்ல. அவர்கள் ஒரு மாற்றத்தை மிகவும் தீவிரமாக, சொல்லப்போனால் மிகத் தீவிரமாக விரும்பினார்கள். மேலும், அவர் பேசிய விதம் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை அதனால்தான் முதல் முறை வாக்காளர்களும் மற்றவர்களும் அந்த மாற்றத்திற்காக அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள், ஏனென்றால் அவர்களுக்கு வேறு எதுவும் கண்ணில் படவில்லை” என அதில் கூறியிருக்கிறார்.