AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலைக்கு எண்டு கார்டு? அடுத்த CM தனுஷா, விஜய்யா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் போட்ட குண்டு!

CM Joseph Vijay And Dhanush Political : தமிழக அரசியலில் வரும் காலத்தில் நடிகர் தனுஷின் அரசியல் வருகை இருக்கும் எனவும், அப்போது, முதல்வர் விஜய்க்கு போட்டியாக தனுஷ் இருப்பார் என்று ஜோதிட ரிக்கி ரத்தன் பண்டிட் தெரிவித்தார் .

ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலைக்கு எண்டு கார்டு? அடுத்த CM தனுஷா, விஜய்யா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் போட்ட குண்டு!
முதல்வர் விஜய்- தனுஷ் அரசியல் போட்டி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Aug 2026 17:57 PM IST

சென்னையில் அண்மையில் நடந்த விழாவில் முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில், ரிக்கி ரத்தன் பண்டிட் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வலது கையில் கட்டி இருக்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் கயிறு முருகன் அருளின் அடையாளம் ஆகும். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும், உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அரசியலில் வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கியே செல்லும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், விஜய் வரவில்லை எனில், உதயநிதி ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.

தனுஷ் அரசியல் வருகையால் புதிய போட்டி உருவாகும்

இதே போல, வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலைக்கு முதல் அமைச்சர் ஆகும் யோகம் இல்லை. எனவே, தமிழக அரசியலில் முதல்வர் விஜய் தான் முக்கிய சக்தியாக இருப்பார். வரும் காலத்தில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கு யோகம் உள்ளது. இவரது வருகை வரை முதல்வர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி எதுவும் இருக்காது. தனுஷின் அரசியல் வருகைக்கு பின்னரே, தமிழக அரசியலில் புதிய போட்டி என்பது உருவாகும். அதன்படி, தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

2026 தேர்தலில் ரிக்கியின் வெற்றி கணிப்பு

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் இந்த கருத்து அரசியல் வட்டாரம் இன்றி அனைத்து தரப்பிலும் பேசும் பொருளாகி உள்ளது. ஏனென்றால், 2026 சட்டமன்ற தேர்தலின் போது, அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசும் பொருளானது. அது என்னவென்றால், தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 10 மணிக்கு என்ன தொடங்கிய நிலையில், அதற்கு முன்பாகவே 9 மணிக்கு முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் தெரிவித்தது தான்.

மீண்டும் ட்ரண்டிங்கில் தனுஷின் அரசியல் வருகை கணிப்பு

அதன்படி, தேர்தல் முடிவில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டின் கணிப்பு உலக அளவில் கவனம் பெற்றது. அவரது கணிப்பும் பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, தனுஷின் அரசியல் வருகை குறித்து அவர் கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்”.. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம்!!

Follow Us