AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி.. முதல்வர் விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு.. என்ன அது!

Temple Board Trustees Selection Committee : தமிழக கோயில்களில் அறங்காவலர்களை தேர்வு செய்து நியமனம் செய்யும் குழுவில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி அகோரத்தை நியமனம் செய்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளார் .

அரச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி.. முதல்வர் விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு.. என்ன அது!
அர்ச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Aug 2026 15:52 PM IST

தமிழகத்தில் கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்ன் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா ர்களை நியமனம் செய்வதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அதற்கான உரிய பெயர் பட்டியல்கள் தயார் செய்து சமர்ப்பிப்பதற்காக மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: நெல் கொள்முதலில் அலட்சியம் காட்டும் அரசு, வீணாகும் நெல் மூட்டைகள் – டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம்

அறங்காவலர் தேர்வு குழுவில் இடம்பெற்றவர்கள்

  • தலைவர்- தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் பொம்மபுரம் ஆதீனம், மயிலம்.
  • துணைத் தலைவர்- டாக்டர் கே. ராமநாதன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ( ஓய்வு).
  • உறுப்பினர்- அர்ச்சனா கல்பாத்தி அகோரம்.
  • உறுப்பினர்- ப. ரா. சம்பத் இந்திய ஆட்சி பணி ( ஓய்வு).
  • உறுப்பினர் மா. சுமதி ( என்ற) சுமதி ஸ்ரீ.
  • உறுப்பினர்- த. வேல்முருகன்.
  • பதவி வழி உறுப்பினர் மற்றும் செயலாளர்- இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.

அர்ச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னாள் நடிகரும், தற்போதைய தமிழக முதல்- அமைச்சருமான ஜோசப் விஜய் நடித்த கோட் மற்றும் பிகில் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்

இதே போல, விஜயின் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசின் சிறப்பு பிரதிநிதி பதவி அளிக்கப்பட்டு விமர்சனங்கள் எழுந்த நிலையில் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணனுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக விஜயின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வரின் ஆலோசர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேற்கண்ட இந்த நியமனங்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமனம் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: ஓடும் கன்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து 10 லேப்டாப்கள் திருட்டு.. கள்ளக்குரிச்சியில் பகீர் திருட்டு சம்பவம்!

Follow Us