Rio: மேடி படத்தில் எனது கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் – ரியோ ராஜ் பேச்சு!
Rio Raj character In Maddy Movie: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரியோ ராஜ். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மேடி. வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இது உருவாகிவரும் நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரியோ ராஜ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் லீட் ஹீரோவாக படங்களில் நடித்துவருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ராம் அண்ட் லீலா (Ram And Leela). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. வித்தியாசமான காதல் கதைக்களத்தில் இப்படம் வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் ரியோ ராஜ் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் மேடி (Maddy). இதை இயக்குநர் கார்த்திகேயன் பிகே (Karthikeyan BK) இயக்க, ரியோ ராஜ் மற்றும் கல்யாணி பாடல் புகழ்பெற்ற சானியா அய்யப்பன் (Saniya Iyappan ) இணைந்து நடித்துள்ளனர்.
இப்படமானது வித்தியாசமான மற்றும் சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரியோ ராஜ் தெரிவித்துள்ளார். அதுகுறித்து தெரிந்துகொள்ளலாம்.




இதையும் படிங்க: ஷமாவின் ஸ்டாம்ப் டாஸ்க் விவகாரம்.. ஜேசனை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – புரோமோ இதோ!
மேடி திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரியோ பகிர்ந்த விஷயம்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரியோ ராஜ், அதில் “நான் இப்படத்தில், பெண்களிடம் பேசத் தயங்கும் ஒரு பையனாக நடிக்கிறேன். இது ஒரு வேடிக்கையான காதல் கதை. என் கதாபாத்திரமான சச்சின், விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ஒரு ஆண்கள் பள்ளியில் படித்திருக்கிறான். அவனது அப்பா கிரிக்கெட் விளையாடியதால், அவனையும் ஒரு கிரிக்கெட் வீரனாக்க விரும்புகிறார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!
இதன் விளைவாக, அவன் பெண்களிடம் பேசத் தயங்குகிறான். அவன் எப்படித் தன் காதலியைக் கண்டுபிடித்து அவளுடன் பழகுகிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையக்கரு. என் கதாபாத்திரத்தின் பெயர் சச்சின் என்றாலும், மேடி என்பது அவன் தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் பெயர் “என அதில் அவரின் கதாபாத்திரம் பற்றி பேசியிருந்தார்.
மேடி திரைப்படம் குறித்து ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
With some of the biggest names coming together, the journey began with great promise. What started with big hopes now ends with even bigger memories.
And just like that, it’s a wrap. 🎬@rio_raj & @SaniyaIyappan_
Written & Directed by @karthikeyannav
A @dhibuofficial Musical pic.twitter.com/FNBUlrlMhg— Rio raj (@rio_raj) September 15, 2026
இந்த மேடி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் திப்பு நினன் தாமஸ் இசையமைக்க, ரோல் டைம் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படமானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.