ரியோ ராஜின் மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது – வைரலாகும் வீடியோ
Maddy Movie Shooting Wrapped | நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மேடி. இந்தப் படத்தில் ரியோ ராஜூக்கு ஜோடியாக நடிகை சானியா ஐயப்பன் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரியோ ராஜ். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. சின்னத்திரையில் மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் வெள்ளித்திரையில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகதான் நடிகர் ரியோ ராஜின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரியோ ராஜிற்கு ஜோ படத்தில் தொடங்கிய வெற்றி அடுத்தடுத்து ஸ்வீட் ஹார்ட் மற்றும் ஆண் பாவம் பொல்லாதது என தொடர்ந்து கொண்டே வருகின்றது.
மேலும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ராம் அண்ட் லீலா. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. சயன்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.




ரியோ ராஜின் மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது:
அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் தற்போது நடித்துள்ள படம் மேடி. இந்தப் படத்தில் நடிகர் ரியோவிற்கு ஜோடியாக நடிகை சானியா ஐயப்பன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திகேயன் பிகே எழுதி இயக்கி உள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனமான ரோல் டைம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் கலையரசு தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With some of the biggest names coming together, the journey began with great promise. What started with big hopes now ends with even bigger memories.
And just like that, it’s a wrap. 🎬 #Maddy
Starring @rio_raj & @SaniyaIyappan_
Written & Directed by @karthikeyannav
A…— Kalai Arasu (@KalaiArasu_) September 15, 2026
Also Read… SJ Suryah: அவர் இல்லாமல் நான் இல்லை.. அஜித் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா!