AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகை பார்வதியின் பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

Pradhama Drishtiya Kuttakkar Movie | மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான படம் பிரதம திருஷ்டிய குட்டக்கர். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகை பார்வதியின் பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
பிரதம திரிஷ்டிய குட்டக்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2026 16:54 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பார்வதி திருவோத்து. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வந்த நிலையில் பிறகு கன்னடம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். அந்தப் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பூ பட நடிகை பார்வதி என்றே கவனத்தை ஈர்த்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் தனுஷ், கமல் ஹாசன், ஆர்யா மற்றும் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை பார்வதி திருவோத்து அதிக அளவில் மலையாள சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் இறுதியாக ஐ நோபடி படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமரன் உடன் இணைந்து நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் பிரதம திருஷ்டிய குட்டக்கர் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:

இந்த பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை இயக்குநர் ஷகத் நிலம்பூர் இயக்கி உள்ள நிலையில் படம் க்ரைம் ட்ராமா பாணியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், விஜயராகவன், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், வினய் ஃபோர்ட், அஸீஸ் நெடுமங்காடு, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், பாலாஜி ஷர்மா, பிரவீன், பிருந்தா மேனன், சுபர்ணா, சிராஜ், ஜெயஸ்ரீ, கேத்தரின் மரியா, ஸ்ரீஜித், டி, நியாஸ் பேக்கர், லால் ஜோசிகர் ரவி, உதயகுமார் மற்றும் ஜெயராஜ் கோழிக்கோடு ஆகியோர் நடித்து உள்ளனர்.

Also Read… பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த நடிகை ஆனந்தி – போட்டியளர்களிடையே சலசலப்பு

இந்தப் படம் கடந்த 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை பார்வதிக்கு இந்தப் படம் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது மூக்குத்தி அம்மன் 2 படக்குழு – வைரலாகும் டீசர்!

Follow Us