AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om Movie: மோதல் வேண்டாம்.. ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை தவிர்க்க நெட்பிளிக்ட்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஓம் படக்குழு?

Om Movie Release Date Update: நடிகர் தனுஷின் நடிப்பிலும்,தயாரிப்பிலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓம். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிலீஸ் தேதியை மாற்றியமைக்க ஓம் படக்குழு ஓடிட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.

Om Movie: மோதல் வேண்டாம்.. ஜெயிலர் 2 படத்துடன் மோதுவதை தவிர்க்க நெட்பிளிக்ட்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஓம் படக்குழு?
ஓம் திரைப்பட வெளியீட்டுத் தகவல்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Sep 2026 08:22 AM IST

தென்னிந்திய மொழிகளில் இயக்குநராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் தனது பிரம்மாண்டமான தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாக்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஓம் (Om). இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்க, வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தனுஷ் தயாரிக்கிறார். இதில் அவருடன் மம்முட்டி, சாய் பல்லவி (Sai pallavi) மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை மற்றும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டுவந்தது. இறுதிக்கட்டத்தை எட்டிய நிலக்கியில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தொடங்கியுள்ளது.

இந்த படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என ஆரம்பத்திலே அறிவிக்கப்பட்டது. இதன் பிறகே ரஜினியின் ஜெயிலர் 2 படமானது அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தையில் படக்குழு உள்ளதாம்.

இதையும் படிங்க: பிக்பாஸில் சாதிகாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

நெட்பிளிக்ட்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஓம் படக்குழு:

ஜெயிலர் 2 படத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்காக, ஓம் படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டை 2026, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு நெட்ஃபிலிக்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியானது எப்படி? நடிகை யோகலட்சுமி ஓபன் டாக்

அனைத்தும் நெட்ஃபிலிக்ஸின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது. ஆனால ஓம் படக்குழு ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இருப்பதாக தங்களின் சமூக ஊடக பக்கங்களில் அறிவிக்கவில்லை. ஒருவேளை இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் இருந்தால், 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் மாற்றப்படுவதாக இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

தனுஷின் ஓம் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த படமானது செம்மர கடத்தல் மற்றும் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையே உள்ள பாசப்போராட்டம் குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படம் தனுஷுக்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us