AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nani: பான் இந்திய படம் என அழைக்க விரும்பவில்லை.. முதல் உரிமை தெலுங்கு தான் – நானி!

Nani Reveals The Paradise Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் நானி. இவரை நேச்சுரல் ஸ்டார் என ரசிகர்களும் அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் தி பாரடைஸ் என்ற திரைப்படமானது வெளியாகி காத்திருக்கும் நிலையில், புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Nani: பான் இந்திய படம் என அழைக்க விரும்பவில்லை.. முதல் உரிமை தெலுங்கு தான் – நானி!
நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Sep 2026 17:54 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் இறுதியாக ஹிட் 3 (HIT 3) படமானது வெளியானது. இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக தயாராகிவந்த திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth odela) இயக்க, ஐவிஒய் என்டேர்டைமென்ஸ்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப்பணிகளில் இருக்கிறது. இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், சிறப்பாக இவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில நேர்காணல் ஒன்றில் பேசிய நானி, தி பாரடைஸ் படம் பற்றி விளக்கமான பதிலை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நானியின் தி பாரடைஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகாதா? வைரலாகும் தகவல்

தி பாரடைஸ் திரைப்படம் குறித்து விளக்கமாக பேசிய நடிகர் நானி:

நடிகர் நானி அந்த நேர்காணலில், “நாங்கள் இதை ஒரு பான் இந்தியத் திரைப்படம் என்று அழைக்க விரும்பவில்லை. அது மிகவும் இழிவான சொல். தி பாரடைஸ் படத்திற்கு தெலுங்குதான் முதல் முன்னுரிமை. தமிழ் மற்றும் பிற பார்வையாளர்கள் இந்தப் படத்துடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.

இதையும் படிங்க: டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்

அனிருத்தைப் பொறுத்தவரை, இது முற்றிலும் நேரத்தைப் பொறுத்தது, அவரது பணிச்சுமை ஏற்கனவே மிக அதிகம், அதனால அவரால் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.

நானியின் தி பாரடைஸ் திரைப்படம் பற்றி நானி பேசியதாக வைரலாகும் வீடியோ பதிவு:

நானியின் தி பாரடைஸ் திரைப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நானி, அடித்தட்டு மக்களின் தலைவனாக இருக்கிறார். அவர் தனது மக்களுக்காக செய்யும் நன்மையையும், கேங்ஸ்டர்ஸ் இடையே நடக்கும் போராட்டங்களையும் மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து வெளியான 2 பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us